உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

பரிபுரம் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பரிபுரம் என்பது சிலம்புப் பொருளது.புரம், புரி என்பனவும் வளைதற் பொருளால் அமைந்த சொற்களே. காற் படத்தொடு வளைந்து கிடந்து ஒலி செய்யும் சிலம்பு 'பரிபுரம்' எனப்பட்டது, வடிவு கருதிய ஆக்கம். சிலம்பு என்னும் பெயர் ஒலித்தற் பொருள் கருதிய ஆக்கம்.

"பரிபுரம் புலம்ப" என்கிறார் கம்பர் {பால. 872,908).

பரிமணி:

பரிமணி என்பதை மருத்துவ நூல்கள் 'கரந்தை' என்று கூறும். இக்கரந்தை 'கொட்டைக்கரந்தை' என்பது. 'கொட்டாங் கரந்தை' எனவும் அது வழங்கும் (ஐங்குறு. 26. உ.வே.சா. குறிப்பு). கரந்தைப் பூவின் அமைப்பைப் புறப்பாடல் உவமையால்

காட்டும்.

நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை" என்பது அது (281).

நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப் பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு என்பார் பேராசிரியர் ஒளவை (புறம். 261).

பரிமாற்று :

பரிமாற்று 'கொடுத்து வாங்குதல்' பொருளது. பண்டமாற்று என்பது பரிமாற்றமே. ஒரு பொருள், இதனைக் கொடுத்துப் பிறிதொன்றனிடம் இருந்து இதனைப் பெற்றது எனக்கூறும் ஓர் அணிவகை 'பரிமாற்றணி' எனப்படும். 'பண்டமாற்று' என்பது போல் இப்பரிமாற்றணி அமைவதாம். இது பரிவருத்தனை எனவும் படும். 'மாறாட்டு' என்பதும் அது.

"இவைகொண் டிவையெனக் கீந்தன ரென்று நவைதீர மொழிவது நவில்பரி மாற்றம்”

என்பது அதன் இலக்கணம் (வீரசோழியம். 153) பரிமாறுதல் :

சொல்

பரிமாறுதல் இரு வகை வழக்குகளிலும் பெருக வழங்கும்