உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

125

வேட்டி துண்டு கட்டுதல் என்பது அந்நிகழ்வுக்குப் பெயர். உறவினர் (சம்பந்திகள்) செய்வது அது. உற்றார் (பங்காளிகள்) செய்தல் விலக்குடையது.

பரிவருத்தம் :

பரிபுலம்புதல் போல்வது இது. மீள மீள வரும் மிகு வருத்தத்தைக் குறிப்பதுடன் உலக முடிவு, ஊ ஊழி முடிவு என்பதையும் குறிக்கும்.

ஒரு பொருள் கொடுத்து இன்னொரு பொருள் வாங்குதல் பரிவருத்தம் எனவும் படும். இனிச் சுற்றுதல், வட்டம், ஆமை முதலிய பொருள்களையும் தரும்.

பரிவாரம் :

பரிவாரம் என்பது பரியாளம் எனவும் வழங்கும்.

'பரியாளம் என்பது பரிவார மாகும்" என்பது திவாகரமும் (மக்கட்) பிங்கலமும் (845), பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும். 'பரிசனர்' என்றதும் இது. படைஞர் ஏவலர் என்பாரையும் குறிக்கும் (சதுரகராதி).

திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு.

கோவை,திருச்சி, மதுரை மாவட்டத் தொட்டியக் குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு என்பதைச் செ.ப.க. அகராதி சுட்டும். பரிவாரம், 'உறை' என்னும் பொருள் தென்பது யாழ்ப்பாண அகராதி.

பரிவு :

பரிவு அன்புப் பொருளது. 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்" என்னும் தொடர் கண்ணப்பன் அன்பைக் காட்டும். அவன் வடிவென ஒன்று இல்லையாம்; அன்பே அவன் வடிவாம்' பரிவின் தன்மை உருவு கொண்டனை யவன்" என்கிறது பதினோராம் திருமுறை.

"பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின், யானைபுக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே

எனப் பரிவின் சிறப்பை விளக்கும் புறநானூறு (184).