உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

'அன்பு கெடக் கொள்ளும் பொருள்' என உரைக்கும் பழைய உரையாசிரியர், 'பரிவுதவ' என்றோதி 'அக்குடிகட்கு வருத்தமிக' என்றுரைப்பாரும் உளர் என்கிறார்.

பரிவேட்டித்து, பரிவேட்பு :

'பரிவேட்டித்து' என்பதற்குச் 'சுற்றி' என்னும் பொருளுண்டு என்பது விவேக சிந்தாமணியால் விளங்கும்.

'பரிவேட்பு' என்பதற்கு வட்டப் பொருளுண்மை பதிற்றுப் பத்தால் தெளிவாம். "பார்வற் கொக்கின் பரிவேட்பு" என்பது அது

(21).

'பரிவேடணம்' என்பதற்குச் சூழுதல் பொருளுடை மையைச் சங்கத்தமிழ் அகராதி சொல்லும்.

'பரிவேடபுடம்' என்பதற்கு ஆறு ஓரை சேரப் பரிவேடமாம் என மருத்துவ அகராதி உரைக்கும்.

பரிவேடம்:

'ஊர்கோள்', 'வட்டம்' என்பதுவும் இதன் பெயர். கதிரையும் திங்களையும் சுற்றியமைந்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம். திங்களைச் சுற்றிய வட்டம் 'கோட்டை' எனவும் வழங்கும். எட்டக்கோட்டை யிட்டால் கிட்ட மழை; கிட்டக் கோட்டையிட்டால் எட்ட மழை" என்பது பழமொழி. அறிவார்ந்த பெருமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேட்டத்துடன் எண்ணத்தக்கதாம். உள்ளொளி

மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க.

'பரிவேட மிட்டது கொல் பார்" என்று கண்ணன் அசுவத்தாமனுக்குக் காட்ட”லைக் காட்டுகிறது பாரத வெண்பா. பரிவேடிப்பு :

பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் 'பரிவேடிப்பு' 'பரிவேடித்தல்' என்பதும் அது.

“மின்னணி மதியம் கோள்வாய்

விசும்பிடை நடப்பதேபோல்

கன்மணி யுமிழும் பூணான்

கடைபல கடந்து சென்றான்”

என்னும் சிந்தாமணியும் (1098) "கடைபல கடந்து விசும்பிடையிற் கோள்களிடத்தே, யுறையும் ஒளியணிந்த மதியம் அதனைக் கைவிட்டு நிலத்தே நடப்பதுபோலப் போந்தான் என்க. கோள் -