உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

127

பரிவேடிப்புமாம்; வந்தவர்கள் சூழ நடுவே போவதற்குவமை' என்னும் உரையும் காண்க.

பரிவை :

‘நந்தியா வட்டம்’ ‘நந்தியா வட்டை' என வழங்கப்படும் பூ 'பரிவை' எனப்படும். ஆங்குள்ள வட்டம், வட்டை என்னும் சொற்பொருளை வெளிப்படக் காட்டுவது பரிவையாதல் அறிக. பரி> பரிவு பரிவை.

வட்டம் வட்டு வட்டை என்பன 'வள்' என்னும் வேரில் இருந்து வருவன போன்றன.