உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

3."பர்- பரு

""

பர் என்பது பரியாதலை அறிந்து அதன் வளைவுப் பொருளையும் கண்டோம். பர் உகரம் சேரப் 'பரு' என ஆதலால் வளைந்த அது திரளுதல் ஆதலை இவண் அறியலாம்.

பரிதி, பருதி எனவும் வழங்கும், பரியது பருமை ஆகும்.

பரிதி கதிரோனைக் குறித்தல் போல் பருதியும் கதிரைக் குறிக்கிறது.

"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை" என்னும் குறளில் பரியது பருவுருவமுடையது என்பதைச் சுட்டுகிறது. இத்தகைய சொற்களால், வளைதற் பொருளுக்கும் திரளுதற் பொருளுக்கும் உள்ள நெருக்கம் புலப்படும்.

பரு - பருத்தல் - பருமன் - பருமை என்பவற்றைப் பார்த்த அளவானே, திரளுதல் திரட்சி என்பவை எளிதில் விளங்கும்.

வெப்பத்தாலோ உள் ஊறுகளாலோ உடலில் ஓரிடம் தடிக்கின்றது; அத்தடிப்புச் செல்லச் செல்லத் திரள்கிறது; பருக்கிறது. அதற்குப் 'பரு' என்று பெயர் சொல்கின்றனர்.

ஓரிடத்துத் தோன்றும் சிறு கட்டி பரு எனப்பட்டால், உடலே திரளுதல் பருத்தல், பருமன் எனப்படுகின்றது. பருமை என்பது பருப்பு என்னும் பொருளிலே கொங்குவேளிரால் ஆளப்பட்டுள்ளது:

"பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் இன்றி"

(பெருங்.24:196).

"பளிதம் பெய்த பருப்பிற் றேய்வை”

(பெருங்.416:19)

பரு என்பது பருத்த சிலந்திச் சுட்டியைக் குறிப்பதுடன், வியர்க்குரு என்பதையும் குறிப்பதை அகராதிகள் குறிக்கின்றன. பருப்பம், பருப்பதம் என்பவை மலையைக் குறிக்கும். 'பரு' என்பதும் மலையைக் குறிக்கும். பரு கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளி விழாப் பேரகராதி.