உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருக்கன் :

வேர்ச்சொல் விரிவு

129

பருத்தவன் பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு. பரும்படியானது. பருவட்டானது, பருவொட்டானது என்பவையும் இத்தகையன. பருத்தவன் தடித்தவன் ஆவன். உடல் தடிப்பும் உள்ளத்தடிப்பும் கூட பருத்ததாகச் சொல்லப்படும். செருக்கைத் தலைக்கனம் என்பதில்லையா; அதுபோல் என்க. மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது, பருமை வன்மை எனக் கொண்ட பொருளின் வழித்தாம்.

பருக்கை :

பருத்தல் என்பது பருக்கை எனவும்படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக்கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன்

பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங்கல்லே. எனினும் அது பரியகல் உறுத்தும் துயரினும் பருவரல் (துயர்) மிகவுண்டாக்கும் கல்லாதல் அறியத் தக்கது. பரல் என்பது பருக்கைக்கல். செருப்பிடையே பட்டுக் காலை வருத்தும் கல்லின் கொடுஞ் செயல் பட்டார்க்கே தெரியும். அதனால் பகைவரை வாட்டவல்ல வேந்தன் ஒருவன் 'செருப்பிடைப் பரல்' அன்னன் எனப் பட்டான். "செருப்பிடைச் சிறுபரல் அன்னன்” என்கிறது புறநானூறு (257).

கண் ணுள் குறுஞ்சிறு பரல் புகுந்து தரும் அல்லலைச் சொல்லி முடியாது, கண் வீங்கி இமை வீங்கி முகம் வீங்கிப் படும்பாடு பட்டார் அன்றிப் பிறர் அறியார். அதனால் விளக்கெண்ணெயும் தாய்ப்பாலும் கலந்து கண்ணுள் விட்டு மெல்ல நீவிப் 'பருக்கை எடுப்பார்' இந்நாளில் கூடச் சிற்றூர் களில் உளர். 'பருக்கை எடுத்தல்" என்பது வினை; "பருக்கை எடுப்பார்" பெயர்.

அப்பருக்கை எப்பருக்கை? பட்ட இடத்தைப் பன்மடங்கு பருக்க வைக்கும் அதற்குப் பருக்கை என்பது நல்ல பட்டம் தான்! பருக்கைக் கல்லுக்கும் பருக்காங்கல் என்பதொரு வழக்குப் பெயர்.

அரிசி 'மணி' எனப்படும். மணி என்பதற்குச் 'சிறு' என்னும் பொருள் உண்டு. சிறுமணிப் பயறு என ஒரு பயறும் உண்டு. மணிக்கடல், மணிக்கொச்சம், என்பவை சிறுமை சுட்டும் ஒட்டுச்