உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பருந்து :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது. பரியது அது என்னும் பொருட்டால் பருந்துக்குப் 'பாறு' என்றொரு பெயரும் ஏற்பட்டது.

பருத்த வடிவால் பருந்து என்னும் பெயரும், கருத்த வண்ணத்தால் கருடன், கலுழன் என்னும் பெயர்களும், மிக உயரமாகப் பறத்தலால் உவணம் என்னும் பெயரும் அதற்கு உண்டாயின.

-

-

பருந்து ஓரிரையைக் கண்டு வீழ்ந்து இறங்கும் தோற்றத்தைக் கண்டோர் பருந்தின் வீழ்வு, பருந்தின் வீழ்ச்சி, பருந்தின் வீழ்க்காடு -என நூற்பாவின் பொருணிலை அமைதிக்கு ஒரு வாய்பாடு கண்டனர்.

பருந்து இரையை எடுக்கும் இழுபறியையும் ஆடும் ஆட்டத்தையும் கண்டவர்கள் குத்திக் குதறிக் கொடுமைப்படுத் துதலைப் 'பருந்தாட்டம் ஆடுதல்' என்றனர்.

“பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டி”

என்பதொரு தனிப்பாட்டு.

பருந்தின் வாயமைப்பைக் கூர்ந்து கண்ட மீனவர் 'பருந்துவாயன்' என ஒரு மீன் வகையைக் கண்டனர். அதனைப் பறாளை விநாயகர் பள்ளு "தோகை பருந்துவாயன் மாட்டுமீன் எனப் பயன்படுத்திக் கொண்டது (15)

தச்சுப்பணியர் உள்ளத்துப் 'பருந்தின் வால்' பதிந்தது. அதனால் பருந்து வால்போல் வெட்டிப் பலகையின் மூலைப் பொருத்து இணைத்தலைப் 'பருந்துவால்' எனப் பெயரிட்டனர்.

பரிதல்-வளைதல்; பரிந்து-வளைந்து; இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது. பறக்கும் பருந்துக்கும் வளையலாம் பருந்துக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமே என்று எண்ணிய சங்கச் சான்றோர் "பறாஅப் பருந்து" என்றனர் (கலி. 147).

பருப்பம் :

பருப்பு-பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள் ஒட்டு; எ-டு; கூடு+அம்=கூடம்.

பருத்த உயிரி யானை; அவ்வியானை 'நடக்கும் மலை எனப்படும். அவ்வியானையின் முகபடாமும், அம்பாரியும்