உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பருத்தி:

வேர்ச்சொல் விரிவு

131

பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய் விரிந்து காணலும் நோக்கின் பருத்திப் பெயர்ப் பொருத்தம் மிக விளங்கும்.

பருத்தி தமிழகத்துப் பழம்பொருள். நூற்றலும் நெய்தலும் பண்டே சிறக்க நடந்த தொழில், பெரும்பாலும் அத்தொழிலில் மகளிர் ஈடுபட்டிருந்தனர் என்பது "பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன' எனவரும் புறப்பாடலால் (125) விளங்கும். அதிலும் கணவனை இழந்த கைம்மை மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டனர் என்பது விளங்குகிறது. "ஆளில் பெண்டில் தாளில் செய்த, நுணங்கு நுண் பனுவல்' என்கிறது நற்றிணை (353)

“கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த

மூடைப் பண்டம் இடைநிறைந்து”

எனப் புறநானூறும் (393) "பொதிமூடைப்போரேறி ஆடும் நாயும் ஆடும் ஆட்டத்தைப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. 'பொதிமூடை' என்பது பருத்தி மூடையைப் பொதுவகையிலும் பிறவற்றைச் சிறப்பு வகையிலும் சுட்டும்.

பருத்தி என்பதற்குப் பாரம் என ஒரு பெயர் உண்டு என்பதைக் குறிஞ்சிப் பாட்டுக் கூறும் (92).

பருத்திப் பஞ்சைச் செறித்து வைத்த குடுவை 'பருத்திக் குண்டிகை' எனப்படும்.

பருதி :

"பெரிது பெரிது புவனம் பெரிது" என்பது எவரும் அறிந்தது. அப்பெரிய புவியும் கதிரோனை நோக்கச் சிறிய துண்டம் என்பது அறிவியல் கணிப்பு. பருதியில் இருந்து சிதறி விழுந்த துண்டுகளில் ஒன்றே புவி எனின், இத்துண்டங்கள் எல்லா வற்றையும் கொண்டிருந்ததும், இத்துண்டங்களை அகல விட்டும் மிகப் பேரண்டமாகத் திகழும் அப்பருதியாம் கதிரின் பருதியைக் கணித்தல் அரிதே. அதனைப் 'பருதி' என்றது எத்தகை தகவுப் பெயர்!

பரிதி, பருதியாம் வடிவால் 'சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி' எனத் தேராளியைக் குறிக்கிறது பதிற்றுப் பத்து (46.8). பருதி ஞாயிறு என்பது பருதிப் பொருள் வெளிப்படத் தெளிவிக்கும் (பெருங்கதை).