உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

கவலைப் பெருக்கம் வாழ்வில் உண்மையைக் காட்டுவது போலவே சொற்களும் விரிவாக உள்ளன. அவற்றுள் 'பருவரல்' ஒன்று. எஞ்சிய துயரச் சொற்களினும் விஞ்சிய துயரை விளக்குவது 'பருவரல்' என்பதை அதன் பருமையே காட்டும். 'பருவருதல்' எனினும் பருவரலே.

பருவரல் பொறுக்க முடியாத் துயர் என்பதைப் "பொறை யின்று பெருகிய பருவரல் என்பதால் வெளிப்படுத்துவார் தொல்காப்பியர்.

“பருவரல் தீரக் கடவுமதிபாக”

என்னும் ஐங்குறுநூற்றுப் பருவரல் பெரும் பிறிதென அறிக. (488) அதனிற் பருந்துயர் இல்லையே!

பரூஉ:

'பரூஉ' பருமைப் பொருளதாதலைத் திவாகரமும் (பண்பு) பிங்கலமும் (1928) உரைக்கும்.

பரூஉச் சுடர், பரூஉச்செவி, பரூஉத்தொடி இன்ன பலவற்றைச் சொல்கிறது பெருங்கதை.

பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பருஉக்குடர்,பரூஉக் குரல், பரூஉக்கை, பரூஉத்தாள், பரூஉத் திரி, பரூஉப்பகடு, பரூஉப்பணை, பரூஉப்பெயல் இன்ன பலவற்றைப்பயில வழங்கு கின்றன பாட்டு, தொகைகள்.

பரேர் :

பருஏர்-பரேர். பருத்ததும் அழகியதுமாம் தன்மை 'பரேர்' எனப்பட்டது.பருமை அழகு இவற்றொடும் வலிமையும் அமைந்தது 'பரேர் எறுழ்' எனப்பட்டது.

“பரேரெறுழ்க் கழற்கால்” - பட். 294. “பரேரெறுழ்த் தடக்கை - அகம். 148.

“பரேரெறுழ்த் திணிதோள்” பெரும்பாண். 90, நெடுநல். 31,

-

“பரேரெறுழ் முழவுத்தோள்" - பதிற்றுப். 81.

என்பவற்றைக் காண்க. புழகு என்பதொரு பூ 'பரேரம் புழகு எனப்படுகின்றது. (குறிஞ்சிப் பாட்டு - 96). அதன் பூ செந்நிறம் என்பது 'அரக்கு விரித்தன்ன' என்பதால் புலப்படுகின்றது.