உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேர்ச்சொல் விரிவு

135

பெருந்தீனி, பெரும்பாடு, பெருங்காயம், பெருங்கோழி இவ்வாறு பருமை பெருமையடையாக வருதல், பருமிதம் எனவும் வழங்கும்.

பருவல் என்பது பருமை என்னும் பொருளில் வழங்குதல் உலக வழக்கு.

பருவம் :

'பருவ மழை' என்பதும் 'பருவத்தே பயிர்செய்' என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழை பெய்யும் பருவமாம்.

காலச் சோளம், காலப் பருத்தி, காலமழை என்பவற்றில் உள்ள காலம் மழைக்கால மாதல் உழு தொழிலோர் நன்கறிந்தது. 'தற்காலம்' என்பது மழைக் காலத்தை முன்னே குறித்ததென்பது 'தற்பாடிய தளியுணவிற்புள் தேம்ப' என வரும் பட்டினப் பாலையால் விளங்கும்.

காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என அறுவகைப் பருவமும் எண்ணியிருப்பதும், முதற்கண் 'கார்' டம் பெற்றிருப்பதும் கருதத் தக்கது.

கருமுகில் திரண்டு வான்மறைய உருக்கொண்டு பொழிதலைப் 'பருவக் கொண்மூ' என்பர். கொண்டல் என்பதும் நீர் கொண்ட கருமுகிலையே யாம். சூற்கொண்ட மகள் மகப்பேறு உறுவது போல் சூற்கொண்ட முகில் மழைப்பேறு வழங்கி உலகத்தை ஓம்புதல் வான்பெருஞ்சிறப்பாம். இப்பருவம், இயற்கை முதிர்ந்து விளங்கித் தோன்றும் விழுப்பமிக்க தாகலின் பருவம் எனப் பெற்றதாம்.

குமரி ஒருத்தி இயற்கையின் விம்முதலால் இல்வாழ்வு ஏற்கும் பருவத்தை அடைகிறாள் என்பதற்கு அறிகுறி பருவ மடைதலாம். உழவடைக் காலம் கற்கும் காலம் ஆகியவற்றின் சீரிய

வாய்த்த - பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம். அது நிகழ்தற்கு அல்லது அது செய்தற்குத் திரண்டு நிற்கும் முழுத்தமே பருவம் எனத் தேர்ந்ததும், முழுமதி நாளாம் முழுத்தத்தில் திருமணம் வைத்ததும் அதற்கு 'முழுத்தம்' எனப் பெயரிட்டதும் முந்தையோர் பருவம் போற்றிய தேர்ச்சிச் சான்றுகளாம்.

பருவரல் :

இடுக்கண், பழங்கண், புன்கண், துன்பம், துயர், இன்னல், அல்லல் என்ன எண்ணற்ற சொற்கள் கவலைக்கு உள்ளன.