உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இத்தகு நூல்களின் வரவு, பழநூல்களைப் பாழ்மைப் படுத்தும் ஆய்வாளர்க்குத் தவிடு தந்து, முழு மணி நூல்களின் மதிப்பைக் கெடுக்கத் துணையாவதாகிவிடும். ஆதலால், அவற்றின் மூடு திரை கிழித்துப் பொய்ம் முகங்களை வெளிப் படச் செய்தலும் ஆய்வாளர் கடமையாகி விடுகின்றதாம்.

பேரகத்தியமும் ஐந்திறமும் தொல்காப்பியத்திற்கு முந்து நூல்கள் என்று இட்டுக் கட்டப்பட்டுவிடுவதால், அந் நூலாட்சி களும் சொற்களும் எல்லாம் தொல்காப்பியனார்க்கு முற்படவே தமிழ் வழக்கில் ஊன்றிவிட்டவை என்று வை என்று சொல்லப்படுவதற்கு இடமாகிவிடும் அல்லவோ! அதற்கு இடம் தாராமையும், உண்மை உணர்வித்தலும் நோக்காக இவ்விரு நூல் ஆய்வும் ஒரு நூலாகத் தரப்பட்டுள்ளதாகும்.

ஆய்வுநூல் வெளியீடு என்றால், எழுபான் ஆண்டுகளாகத் தொடரும் பெருமையது சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ஆயிரக்கணக்கில் நூல்களை வெளியிட்ட பதிப்பகங்களும் தமிழ்ப் பழ நுல்களுள் ஒன்றுதானும் வெளியிடுதல் அறியாத தமிழகத்தில், தான் தோன்றிய 1921ஆம் ஆண்டிலேயே தொல்காப்பியம் வெளியிட்ட சிறப்புடையது கழகமே ஆகும். அக் கழகத்தின் வழியே இந்நூல்வெளி வருகின்றது. இதற்கு உறுதுணையாக அமையும் ஆட்சியாளர் 'பைந்தமிழ் சீர்பரவுவார்' திருமலி இரா.முத்துக்குமாரசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்.

பாவாணர் ஆய்வு நூலகம், திருநகர்,

தமிழ்த் தொண்டன்,

இரா.இளங்குமரன்

மதுரை-6.