உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியத் திரட்டு

'பேரகத்தியத் திரட்டு' என்பதொரு

நூல்; அது ச.பவானந்தர் அவர்களால் 1912இல் வெளியிடப்பட்டது. அதில், பேரகத்தியம், உரை நூல்களில் கண்ட பேரகத்திய மேற்கோட் சூத்திரங்கள், பேரிசைச் சூத்திரம் என்னும் மூன்று பகுதிகள் மூலமும் உரையுமாய் வெளிப்பட்டுள.

முன்னதில் 164 நூற்பாக்களும், நடுவதில் 19 நூற்பாக்களும், பின்னதில் 14 நூற்பாக்களும் ஆக197 நூற்பாக்கள் இடம் பெற்றுள்.

ம்

அகத்தியம் பேரகத்தியம் சிற்றகத்தியம் என். று இருகூறு பட்டதென்றும் அவை பதினாயிரத்தின் மிக்க நூற்பாக் களையுடையவை என்றும், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் இலக்கணம் அமைந்தவை என்றும், அவை சிதைந்து ஆங்காங்குச் சில வழங்குவனவாயின என்றும் முகவுரைக்கண் குறித்தார்.

மேலும், "அவற்றிற் சில சூத்திரங்களை வித்துவான் களத்தூர் வேதகிரி முதலியார் சுமார் அறுபது யாண்டுகளுக்கு முன்னர் வெளியிட்டனர். சில தொல்காப்பியம் நன்னூல் முதலிய இலக்கண உரைகளிலும் காணப்படுகின்றன. வேதகிரி முதலியார் தம்மிடத்து மூவாயிரம் சூத்திரங்கள் கிடைத்துள்ளன என்று சொல்லி நூற்றறுபத்தைந்து சூத்திரங்களை வெளியிட்டனர். மற்றைச் சூத்திரங்களும் கிடைக்குமென்று பலகாலும் பல்வேறிடங் களிலும் முயன்றும் கிடைத்தில. பின்னும் பதினாறு சூத்திரங்கள் கிடைத்தன. அவற்றையும் கொண்டு தொகுத்து வெளியிடலா யினேன்" என்கிறார்.

பவானந்தர் பதிப்பு 1912இல் வெளிவந்தது. வேதகிரியார் அவர்க்குச் 'சுமார் அறுபதுயாண்டுகளுக்கு முன்னர் வெளி யிட்டனர்' என்பதால் கி.பி.1850 ஆம் ஆண்டை ஒட்டி வெளி வந்தது எனக் கொள்ளலாம். ஆதலால் வேதகிரியார் காலம் 19ஆம் நூற்றாண்டு என்பது வெளிப்படும்.