உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

வேதகிரியார்க்கு அகத்தியர் நூற்பாக்கள் 3000 கிடைத் திருந்தால் அவற்றுள் 1635ஐ மட்டும் வெளியிட்டிரார். (முத்தமிழ் இலக்கணத்துள் ஒரு பகுதியாம் இயற்றமிழ் இலக்கணமேனும், அதன் முழுப்பகுதியும் வாய்க்காவிடின் எழுத்துப் பகுதி மட்டுமேனும் முற்றாக வெளிப்படுத்தியிருப்பார். அவ்வாறு வெளிப்படாமை எண்ணத்தக்கது.)

பதிப்பிக்கப்பட்ட பேரகத்திய நூற்பா நூற்றறுபத்தைந்தும் (தற்சிறப்புப் பாயிரம்1, நூல் 164) எழுத்திலக்கணக் காண்டத்தில் எழுத்துப் படலம், எழுத்துற்பத்திப் படலம், எழுத்து வரன் முறைப்படலம், பன்மொழியாக்கப் படலம், வடமொழிப் படலம் என்னும் ஐந்து படலங்களுடன் முடிகின்றது. 'இந்நூற் பாக்கள் அகத்தியர் செய்தவைதாமா?' என்னும் ஐயம் பவானந் தருக்கு ஏற்படாமல் இல்லை. அதனால் "கிடைத்த மட்டில் இந்நூலின் சூத்திரங்களின் அமைப்பை உற்று நோக்குழி இது அகத்தியனார் செய்தது என்பதற்கு மேற்கண்ட வேதகிரி முதலியார் கூற்றேயன்றி வேறு ஆதரவு கிடைத்திலது என்கிறார்.

<<

C

'அகத்தியம் என்னும் நூல் ஒன்று நிலவுகின்றது என்று எண்ணியிருப்பார்க்கு மனஅமைதி யுண்டாகுமாறு அதனை வெளியிடத் துணிந்தேன்” எனத் தம் வெளியீட்டுத் துணிவையும் உரைக்கிறார்.

வேதகிரியார் 1850ஆம் ஆண்டை பேரகத்தியத்தை வெளியிட்டதைப் பவானந்தர் குறித்துள்ளதை முன்னர் அறிந்தோம். வேதகிரியார் பெரும் புலமையாளராகவும் சிறந்த பதிப்பாளராகவும் உரையாளராகவும் அந் நாளில் விளங்கியவர். திருக்குறள் மூலமும் உரையும் (1849) நாலடியார் மூலமும் உரையும் (1855) என்பவற்றையும் வெளியிட்டவர்.

இவர் களத்தூர் வேதகிரி முதலியார் எனப்படுவார். இவ்வூர் தாண்டை நாட்டைச் சேர்ந்தது. இவர் திருக் குறளுக்குத் தெளிபொருள் விளக்கம் என்னும் உரையும் கருத் துரையும் எழுதினார் (1849). "மதுரை புதுவை சென்னை இச் சங்கங்களில் தமிழ்த் தலைமைப் புலமை நடத்திய களத்தூர் வேதகிரி முதலியார்" என்னும் குறிப்பு 185ல் வெளிவந்த திருக் குறள் பதிப்பில் உள்ளது. இரண்டாம் பதிப்பு அது.

இவர்தம் நாலடியார் மூலமும் உரையும் என்னும் பதிப்பில் (1852) "வேதகிரி முதலியார் பரிசோதித்த பிரதிக்கிணங்க,