உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

143

சேதனப்பட்டு இராமசாமிக்கவிராயரால் பரிசோதிக்கப்பட்டு, ஆறுகாடு முனியப்ப முதலியாரால் பதிப்பிக்கப் பெற்றது. பரிதாபி ஆண்டு பங்குனி மாதம்" என்றுள்ளது.

66

55

இதன் 1863 ஆம் ஆண்டுப் பதிப்பில் (மூன்றாம் பதிப்பு) 'களத்தூர் வேதகிரி முதலியாரால் பதவுரையும் கருத்துரையும் செய்து பல இலக்கண மேற்கோளும் காட்டி அச்சிற் பதிப்பித்த பிரதிக்கிணங்க பூவிருந்தவல்லி கந்தசாமி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் அதன் இறுதியில் நாலடியாருக்குக் களத்தூர் தமிழ்ப் புலவர் வேதகிரி முதலியாரால் செய்யப்பட்ட பதவுரையும் கருத்துரையும் முற்றுப் பெற்றது. இஃது முன் பதிப்பித்த பிரதிக்கிணங்க எழுத்துப் பிழை மாத்திரம் மேற்படி புலவர் குமாரர் சுப்பராய முதலியாரால் ஒருவாறு பரிசோதித்து நிறைவேறியது" என்னும் குறிப்பும் உள்ளது.

ஆதலால் 1863ஆம் ஆண்டுக்கு முன்னரே வேதகிரியார் காலம் நிறைவேறியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். அன்றியும் 1860ஆம் ஆண்டு நாலடியார் பதிப்புக் காலத்திலேயே (இரண்டாம் பதிப்பு) அவர் இருந்திலர் என்பது அறிய வருகின்றது. இக்காலக் குறிப்பை நினைவில் கொள்ளல் மேலாய்வுக்கு உதவியாக இருக்கும்.

1953 இல் தமிழ்ப் புலவர் அகராதி என்னும் நூல் வெளிவந்தது. அதன் தொகுப்பாசிரியர் ந. சி. கந்தையா அவர்கள். அந் நூலில் "வேதகிரி முதலியார் (1795-1852)” என்னும் காலக் குறிப்புள்ளது.

1962 இல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் என்னும் நூல் வெளிவந்தது. அதனை இயற்றியவர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள். அந் நூலிலும் இக்காலக் குறிப்பே உள்ளது.

வேதகிரியாரைக் குறித்துத் தமிழ்ப் புவவர் அகராதி

கூறுமாறு:

"இவர் தொண்டை மண்டலத்திலுள்ள களத்தூரில் பிறந்தவர். இராமாநுசக் கவிராயரின் மாணவர். இவர் மனுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், சன்மார்க்க சதகம், நீதி சிந்தாமணி என்னும் நூல்கள் செய்தவர். இலக்கணக் களஞ்சியம், இலக்கியக் களஞ்சியம் என்னும் இருதொகுப்பு நூல்களும் இவரால் செய்யப்பட்டன. இலக்கணக் களஞ்சியத்திலே