உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இலக்கணத்திரட்டு, பிரபந்ததீபம், கவிசாகரம், குவலயானந்தம், அரிய விதி, மயேச்சுரம், அவனியம், பஞ்சலட்சணப் பயன் முதலிய இலக்கணங்களிலிருந்து பல சூத்திரங்கள் எடுத்து எழுதியுள்ளார். இலக்கியக் களஞ்சியத்துள் கயாதர நிகண்டு, ஏகபாத நிகண்டு, பொதிய நிகண்டு, அவ்வை நிகண்டு முதலிய நூல்களை எடுத்து எழுதியுள்ளார். அமெரிக்கன் மிசன் 1843 இல் அச்சிட்ட சூடாமணி நிகண்டின் 11வது பகுதியில் இவர் செய்த பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன."

'பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்' என்னும் நூலில் வேதகிரியாரைப் பற்றியுள்ள குறிப்பு:

"தொண்டை நாட்டுக் களத்தூர் இவரூர். மகா வித்துவான் இயற்றமிழ் ஆசிரியர் இராமானுச கவிராயரிடம் கல்வி பயின்றார். கவிராயரால் நிறுவப்பட்ட தமிழ் இலக்கியச் சங்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் மதுரையில் ஒரு கனவான் நிறுவிய மதுரைக் கல்விச் சங்கத்துக்கு அழைக்கப்பட்டு அங்குச் சென்று ஏழு ஆண்டு தலைமைத் தமிழ்ப்புலமை நடத்தினார். பிறகு, உடல் நலமில்லாத காரணத்தினால் புதுச்சேரிக்கு வந்து அங்குக் கத்தோலிக்கக் கல்லூரியில் தமிழ்ப் புலவராக இருந்தார். பின்னர் மீண்டும் சென்னைக்கு வந்து ஓர் அச்சுக் கூடம் வைத்து நடத்தினார்.

சூடாமணி நிகண்டின் பதினோராவது பகுதிக்கு உரை எழுதி 1843 இல் அச்சிட்டார். திருக்குறளுக்கு உரை எழுதி 1849 இல் அச்சிட்டார். யாப்பருங்கலக் காரிகையை 1851 இல் அச்சிட்டார். பகவத்கீதையை 1852 இலும், நாலடியாரை 1855 இலும் அச்சிட்டார். யாழ்ப்பாணத்து உதய தாரகைப் பத்திரிகையில் இலக்கண இலக்கியங்களைப் பற்றி (1841 முதல் 1843 வரையில்) கட்டுரைகள் எழுதினார். பல இலக்கண இலக்கிய நூல் களிலிருந்து தொகுத்து இலக்கியக் களஞ்சியம் இலக்கணக் களஞ்சியம் என்னும் பெயருடன் அச்சிட்டார்.

மநுநீதி சதகம், மனுவியாக்கியான சதகம், நீதி சிந்தாமணி இவை ஒவ்வொன்றும் நூறு செய்யுட்களைக் கொண்டது) சன்மார்க்க சாரம் (110 செய்யுள்) என்னும் நூல்களை இயற்றி யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நண்பருக்கு அனுப்பினார். ஆனால், அவை அச்சிடப்படவில்லை.

பேரகத்தியத்திரட்டை

வெளியிட்ட வேதகிரியார் பன்னூலாசிரியர் என்பதும், பழம்பதிப்பாளர் என்பதும்,