உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அகல்

'அகல்' என்பது பல பொருள் தரும் ஒருசொல்; அதன் பொருள்கள் அனைத்தும் 'அகலுதல்' அடிப்படையில் அமைந்தவையாம்.

அகல் வயல் (முருகு. 72), அகல்வானம் (மதுரைக். 32)

அகல் யாறு (கலி.34), அகன்மலை (அகம். 171) அகன்மார்பு (புறம். 255), அகனகர் (மணி 28.198)

அகனாடு (புறம். 249), அகல் ஞாலம் (கலி. 39)

என வருவனவற்றைக் காண்க.

அகல் என்பது பெயர்ச் சொல்லாய், அகன்ற சட்டி, அகல் விளக்கு, அகல் என்னும் ஓர் அளவை ஆகியவற்றைக் குறிக்கும்.

"காரகல் கூவியர் பாகொடு பிடித்த" (பெரும். 377) “ஐயகல் நிறைநெய் சொரிந்து” (நெடுநல். 102)

என்பவற்றில் சட்டியும், அகல் விளக்கும் சுட்டப்பெற்றுள.

அகல் என்னும் அளவைப் பெயர் ஒன்றை உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுகிறார். (தொல். தொகை. 28)

அகல் என்பது 'அகல்வு, அகலம், அகலுகை, அகற்சி, 2அகற்றம் என்று ஆகியும் அகலுதல் பொருளே தரும்.

அகலம்:

அம் என்னும் சாரியை ஏற்று 'அகல்' என்பது அகலம் என்றாகியும் அகன்மைப் பொருளே தரும். அகலம் என்பது அகலக்கவி, அகலவுரை, மார்பு, விரிவு, நிலம், வானம், பெருமை, அகலுதல் என்னும் பொருள்களைத் தருதல் அறிக:

உள்ளகல் வுடைத்தாய். பெருங். 1: 49 : 59. நற் 388. எயிலது அகற்றமும். பெருங். 3.14:24.

1.

2.

அகல்பு பதிற் 43. 33. கு. 743 தொல்.பொ.44.