உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் 36

அகலக்கவியாவான், நால்வகைக் கவிகளுள் ஒருவன். அவன் பாடும் அகலக்கவி, பெருங்காப்பியம். "உலா, அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், பரணி என்பவை ஒன்றற்கு ஒன்று பாடுதல் அருமையன" என்றும், "யாவையும் பாடிக் கோவையும் பாடுக" என்றும் கூறுவர். இவற்றைப் பாடவல்லாரே, 'பாவேந்தர் வேந்தராய்ப் பாராட்டுப் பெற்றனர். சயங்கொண்டாரும், ஒட்டக் கூத்தரும் 'கவிச்சக்கரவர்த்தி' எனப் புகழ் பெற்றதையும் 'பாரகாப்பியம்' பாடிய கம்பர் இப் பட்டம் பெற்றதையும் கருதுக.

இனி, உரைகளுள் சிறப்புப் பெற்றது அகலவுரையாம். குறிப்புரை, சொல்லுரை, பொழிப்புரை, சிற்றுரை, பேருரை என்பவற்றுள் பேருரையே அகலவுரையாம். பல்வேறு நயங்களும் விரிந்து, கூற்றும் குறிப்பும் மலிந்து, தடையும் விடையும் செறிந்து, நூலாசிரியர் நுழையாவிடத்தும் நுழைந்து, நுண்பொருள் காட்டி எண்சுவை கெழும எழுதப் பெறுவதே அகலவுரையாம்.

"தன்னூன் மருங்கினும் பிறநூன் மருங்கினும் துன்னிய கடாவின் புறந்தோன்று விகற்பம் பன்னிய அகலம் என்மனார் புலவர்"

தொல். சிறப்புப் நச்.

மார்பு: ஓதுதலே தொழிலாகக் கொண்டவர் 'ஓதுவார்' எனப் பெறுவது போலவும்,ஓயாமல் ஒலிக்கும் கடல் ‘ஓதம்' எனப் பெறுவது போலவும் இடையறாப் பயிற்சி மேற்கொண்டவர் 'பயில்வான்' எனப் பெறுவர். பயில்வானாக விளங்குவோர், உடற்கட்டை உற்றுநோக்குவார் மார்புப் படலத்தையும், வயிற்றுச் சுருக்கத்தையும் கண்டு களிப்பர். பயிற்சி மேம்பாட்டினால் அகன்று விளங்கும் மார்பினை 'அகலம்' என்றது எத்துணைப் பொருத்தமானது. கோயில் சிலைகளையும், குறிப்பாகக் காவல் வீரர் சிலைகளையும் காண்பார் 'மார்பகலத்தை' அல்லது 'அகல் மார்பை'வியவாது இரார்.

பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மார்பினை இடைக்குன்றூர் கிழார்.

"வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்

அணங்கருங் கடுந்திறல் என்னை முணங்கு நிமிர்ந்து