உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல் அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன மலைப் பரும் அகலம்,”

புறம் 78.

என மூலப்பொருள் விரித்து முறைபெற உரைத்தார்.

விற்பயிற்சியால் சிறந்த குகன் மார்பினைக்,

66

'கண்ணகன் தடமார் பெனும் கல்லினான்"

என்று கம்பர் உரைத்ததையும் கொள்க.

3

விரிவு: "அகல உழுவதினும் ஆழ உழுவதே மேல்' என்னும் நாட்டுப் பழமொழி இப் பொருள் தெளிவிக்கும்.

நிலம், வானம்: 'பெரிது பெரிது புவனம் பெரிது' என்பதாலும் 'பார்' என்னும் சொல் நிலத்துக்கு உண்மையாலும் அகலம் என்பது நிலம் என்னும் பொருள் பெற்றது. நிலத் தடங்கலையும் கவித்து விளங்கும் அகற்சித் தோற்றத்தால் வானும் அகலம் ஆயிற்று.

பெருமை: பருமை, அகலம், விரிவு என்பன பெருமைக்குரி யனவாகக் கொள்ளப்பெறுதலின் அகலத்திற்குப் பெருமைப் பொருள் நேர்ந்தது.

"நின் தோற்றமும் அகலமும் நீரின் உள" என்னும் பரிபாட்டானும் (4:30) "தோற்றம், வெளிப்படுதல்; அகலம், பெருமை" என்னும் பரிமேலழகர் உரையானும் இப்பெருமைப் பொருள் அகலத்திற்கு உண்மை அறியப்பெறும்.

இனி, அகலப் பண்புச் சொற்களை தொகுத்து,

"அகறல் பாழி ஆய்வு பரப்பு அகலுள்

கண்ணறை படர்தல் வியலிடம் ஆன்றல் பயன் நனவு விரிவு மேல்நனி என்றிவை அகலம் என்பர் அறிந்திசி னோரே”

என்பார் திவாகரர்.

மேலும், நீள்தலுக்கு எதிராய், அகலுதல் அகலம் எனக் கொள்க. நீள அகலப் பரப்பே பரப்பெனும் கணக்கியல் புதுவது அன்றே.

அகல் என்பது உள், கண், இடம், தலை என்னும் இடப் பொருள் சொற்கள் ஏற்று, அகலுள், அகன்கண், அகலிடம், அகன்றலை, என்றாகித் தெரு, ஊர், நகர், உலகம் ஆகியவற்றைக் குறித்தலும், அடைமொழியாகி நிற்றலும் ஆயின.