உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

"அகலுள் ஆங்கண்" (குறிஞ். 4; மலை. 438)

"அகலுள் மங்கல அணி எழுந்தது" (சிலப். 1: 47)

"அகன்கண் வைப்பு" (பதிற்றுப். 29:10)

"அகன்கண் வரைப்பு" (கலித். 115:18)

"அகலிடப் பாரம் அகல நீங்கி" (சிலப். 30:180)

"அகன்றலை நாடு" (புறம். 63,89)

என வருவனவற்றை அறிக.

அகல்-ஆல் ஆதல்:

அகலுதல் பொருள் தரும் இவ் வகல் என்னும் சொல்லில் ருந்தே, தொல்காப்பியனார்க்கும் தொல் பழமையான நாளிலேயே 'ஆல்' என்னும் சொல் தோன்றியிருந்ததாம். ஆகலின், நம் தென்மொழியின் தொன்மையையும் முன்மையை யும் என்றும் மாறாச் சீரிய பின்மையையும் காட்டுதற்கு 'ஆல்' போல்வரும் சொற்கள் மறுக்க ஒண்ணாச் சான்றுகளாம்.

“பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே”

என்பது தொல்காப்பிய நூற்பா (376).

'அகல்' என்பது 'ஆல்' என எவ்வாறு மாறியது? ஏன் மாறியது? என அறிதல் வேண்டத்தக்கதே. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என ஆணையிட்டுரைக்கும் ஆசிரியர், தொல்காப்பியனார், "மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா" என்றும் விளக்கினார். எதிரே செல்லும் பரிய ஊர்தி ஒன்றையோ, கவர்ச்சிமிக்க காட்சி ஒன்றையோ கூடக், “கண்டேன் இல்லையே", "அவ்வழியாகத்தானே வந்தேன்”, “எனக்கேதும் தென்படவில்லையே", "என்ன ஐயா வியப்பு.""அந்த வழியாகத் தானே வந்தேன்”, “எனக்குத் தெரியவில்லையே", "ஏதோ அரிச்சலாகப் பார்த்தேன்; தெளிவாகப் புலப்படவில்லை'

ன்னவாறாக உரைப்பாரைக் கண்டும் கேட்டும் உள்ள நாம் "மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா" (வெளிப் படம் பார்த்த பார்வையில் தோன்றாது) என்பதை ஏற்றுக் கொள்ளலே சால்பாகும்.

'பாம்பறியும் பாம்பின் கால்' என்பது போல் அறியவல்ல, பொருண்மை விளக்கச் சொற்கள் உளவாதல் கண்கூடு. எனினும்,