உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

5

வண்டு சென்ற வழியைக் கண்டு கொள்ளல் அரிதாதலும், சான்றுகாட்டி நிலை நாட்டத்தக்க மூலக்கூறு அழிந்து பட் ட்டிருத்தலும் ஆகியவற்றால் எல்லாச் சொற்களும் பொருள் குறித்தலை 'விழிப்பக்' கண்டறிய இயலுமென எவரும் கூறார். அவ்வாறு எல்லாச் சொற்களின் பொருட்பாடும் விழிப்பத் தோன்றாமையால், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன ஆகா என்போர், 'நுண்மாண் நுழைபுலம் உடையவர் ஆகார்' என்பதை அன்றி, 'எண்மதியுடையரும் ஆகார்' என்பதே தகும்.

G

இஃது இவ்வாறாக, 'அகல்' 'ஆல்' யன்முறை' யை

அறிவோம்.

அகல் என்பதன் முதல் நீண்டு. ககரம், கெட்டு, லகர ஒற்றுடன் கூடி, 'ஆல்' என ஆயிற்றாம். இச் சொல்லாக்கம், ஒலியளவு குறையாமல் பொருள்நிலை மாறாமல் புகுந்த 'சொல்லியன் நெறிமுறை'யாகும்.

'அக' என்னும் இணைக் குறில்களின் மாத்திரை அளவும் 'ஆ' என்னும் நெடிலின் மாத்திரையளவும் ஓரளவாக இருத்தல்- இரண்டு மாத்திரை அளவாக இருத்தல்-அறிக. இந்நெறியான் வரும் சொற்கள் எண்ணற்றுப் பல்கியிருத்தலின் சான்றுகாட்டி விளக்க வேண்டுவது இல்லையாம். அன்றியும் இக் கட்டுரை யானும் மேல்வரும் தொடர்கட்டுரைகளானும் அவையெல் லாம் வெளிப்பட விளக்கம் பெறும் என்க.

'ஆல்' என்பதற்கும் 'அகல்' என்பதற்கும் இயல்பால் அமைந்துள்ள தொடர்பு என்னை எனின் காண்போம்.

ஆல் என்பது ஒரு மரப்பெயர் என்பதும், அம் மரம் ஏனைய மரங்களினும் அகன்று பிரிந்து செல்லும் தன்மையது என்பதும் எவரே அறியார்? ஆலின் அகற்சி அருமை பெருமைகளைப் பாண்டியன் அதிவீரராமன்,

"தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே

என்றதும், பாவேந்தர்,

99