உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானை போயின மிலார்கள் எங்கும் பொலிந்தன பவழக்காய்கள்

காயினை நிழலால் காக்கும் இலையெலாம் உள்ளங் கைகள் ஆயவூர் அடங்கும் நீழல் ஆலிடைக் காண லாகும்”

என்றதும் கேட்டு 'ஆம் ஆம்' என்று ஏற்பதையன்றி எதிரிட்டு உரைக்கவும் எண்ணுவரோ?

ஆலின் அடிமரம் பூச்சியரித்தும் பொந்து வீழ்ந்தும் அற்றுப் போயினும் கூட, அதன் வீழ்துகள் அம் மரத்தை முழுதுறத் தாங்கிப் பழுதற விளங்குவதைக் கண்ணாரக்கண்டு களிப்புற்ற ஒரு நல்லோர், "ஈதன்றோ குடிநலம் காக்கும் குணத்தோர் சால்வு' எனத் தெளிந்தாராய்ச்

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு

குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும்”

எனப் புகன்றுள்ள பொருளுரை ஆல் பெற்ற பேறேயன்றோ!

ஆலின் விரிவுக்குச் சான்றும் வேண்டுமோ? அடையாற்றில் அமைந்துள்ள ஆலமரத்தினைக் கண்டால் ‘மூக்கின் உச்சி சுட்டு விரல் சேர்த்து' வியந்து நோக்காது ஒழிவரோ?

மரங்களுக்கெல்லாம் ஒரு காரே இருக்க ஆலுக்கு மட்டும் எத்தனை எத்தனை கால்கள்? வீழ்துகள் எல்லாம் கால்தாமே! ஆகலான் அன்றோ, ஆலமரத்திற்குக் 'கால்மரம்' என்பதொரு பெயரும் ஆயிற்று.

ஆலமரம் நெடுங்காலம் வாழும் இயல்பினது ஆகலின், அச் சிறப்பு வெளிப்பட அதனைத் தொன்மரம் என்றும், முது மரம் என்றும், மூதாலம் என்றும் வழங்கினர். சங்கச் சான்றோர் இதனைத் 'தொன்மூதாலம்' என்றது (குறுந். 15; அகம்.251) மிகத்திட்ப நுட்பம் செறிந்ததாம்.

அகலமரமே ஆலமரம் என்பதற்குச் சான்று:

"கல்கத்தா தாவரஇயல் தோட்டத்தில் உள்ள ஆலமரம் 1782இல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்தில் இருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம் கிழக்கு மேற்கில் 300 அடி; தெற்கு வடக்கில் 288 அடி; அடிமரத்தின் சுற்றளவு 51 அடி;