உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

155

சொல்லை வழங்கியது அது. பிறரும் உடல் என மெய்யைக் குறித்துளர். முத்துவீரியம்,

CC

'ககர முதல் மூவாறும் காத்திர மாகும்”

என்கிறது. இக்'காத்திரம்' என்னும் ஆட்சி முத்துவீரியரின் காலப் பிற்பாட்டைக் காட்டுவதாகின்றது. இம் முத்துவீரியத் திலும் ஒருபொருட் பன்மொழி எண்ணிக்கையில் விஞ்சி நிற்பது பேரகத்தியம் என்னின், அதனிற் பிற்காலத்தது என்பதை அன்றி அதனை முன்னுக்குத் தள்ள என்ன வகையும் இல்லையாம்.

சான்றாகக் காண்க:

மு

பே

மு

பே

66

66

'இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே'

"இரேகை வரிபொறி யிலேகையக் கரப்பெயர்

"ஊமையும் ஒற்றும் உடலெனப் படுமே"

"உடல் உடம்பு ஒற்றுமெய் அல் ஊமை

வியஞ்சனம் மெய்"

மு

பே :

"வன்மை வன்கண் வலிவல் லெழுத்தாகும்

"வலிவன்மை வன்கணம் பரிசம் வல்லினப்

66

மு

"முத்துவீரியம்;

பெயர்"

பே : பேரகத்தியம். இவற்றுள் பின்னதை முன்னதெனக் கூற என்ன முறையுண்டு?'

ஒரு பொருளுக்கு ஒரு சொல் தொடக்கத்தில் ஏற்பட்டி ருக்கும்.. பின்னர் இடந்தோறும் காலந்தோறும் மக்கள் கருத்து வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொற்கள் பல பெருகி வருதல் மொழியியல் முறை. ஆதலால் ஒருபொருட் பன்மொழியின் சொற்பெருக்க - சுருக்க அளவுகள் வழியே ஒரு நூலின் முன்மை பின்மைகளை உறுதி செய்தல் கூடுவதாம். அச் சொற்கள் அம்மொழிச் சொற்களாயினும் வேற்று மொழிச் சொற்களாயினும்.