உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

சேனாவரையர் போலும் புலமைச் செல்வரும் மயக்குண்டு, "தமிழ்ச் சொல் வடபாடைக்கட் செல்லாமையானும் வடசொல் எல்லாத் தேயத்திற்கும் பொதுவாகலானும்' என்றும் எழுதும் நிலையுண்டாயிற்று (தொல். சொல். 401). (தொல்.சொல்.401)

இலக்கண நூலர் நிலையே இவ்வாறாகச் சமயச் சார்பினரோ வரைதுறையின்றி வடசொற்களைக் கொத்துக் கொத்தாகவும் குலைகுலையாகவும் புகவிட்டனர். பாவிகப் புலவர்களும் பின்னடைந்தனர் அல்லர். கம்பரினும் வில்லியார் பெருக்கினார். அவரினும் அருணகிரியார் கூட்டினார். தாயு மானவர் வள்ளலார் முதலியவர்களும் இதற்கு விலக்காகி விடவில்லை. இக்காலப் பகுதியில் எழுந்த முத்துவீரியம், வடமொழி இலக்கணத்தை நன்னூலினும் பன்மடங்கு விரியக் கூறுவதாயிற்று. மொழியியல் என்னும் எழுத்ததிகார இரண்டாம் இயல் நூற்பாக்கள் நாற்பத்தைந்துள் முப்பத்தைந்து நூற்பாக்கள் வடமொழியைத் தமிழில் வழங்கும் வகை பற்றியதாகவே அமைந்தன.

முத்துவீரியம் இவ்வாறு இயலப் பேரகத்தியம் எவ்வாறு இயல்கின்றது? எழுத்திலக்கணக் காண்டத்து ஐந்தாம் 'வடமொழிப் படலம்' என்றே பெயரீடு பெறுகின்றது. அதி லுள்ள நூற்பாக்களில் முத்துவீரியர் சொல்லாத வடமொழி எதிர்மறை வடிவங்களும், வடமொழித் திரிபுப்புணர்ச்சிகளும் விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளன. முத்துவீரியத்தினும் விஞ்சிய வடமொழி இலக்கணம் கொண்ட பேரகத்தியம் அம் முத்து வீரியத்திற்குப் பிற்பட்டதாகுமேயன்றி முற்பட்டதாகாதே. தமிழிலக்கண இலக்கிய ஆய்வுத் தெளிவு சிறிதளவு வாய்க்கப் பெற்றாரும் இம்முடிவில் மறுதலை காணார்.

ஒரு பொருட் பல சொல் ஆய்வும் ஒரு நூலின் கால ஆய்வுக்குத் துணை செய்வதாகும்.

புள்ளி, மெய், ஒற்று என்பன ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

னகர இறுவாய்ப், பதினெண் ணெழுத்தும் மெய்யென மொழிப' எனத் தொல்காப்பியர் மெய்யென ஆள்கிறார். வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் இலக்கணவிளக்கம் என்பனவும் 'மெய்' என்பதை வழங்குகின்றன.

'கம்முதல் மூவாறு உடல்" எனத் தொன்னூல் விளக்கம் கூறிற்று. 'மெய்' என்பதற்குத் தக 'உடல்' என ஒரு தமிழ்ச்