உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்க

159

பின்னர்த்தானே ஏற்பாரும் மறுப்பாருமாம் இருதிறத்தர் எய்தற்கு இயலும்.

“உந்தி தனிநிலை உற்றங் காந் தெழும்”

என்பது முத்துவீரியம்.

(58)

தனிநிலையாகிய ஆய்தம் உந்தி இடமாக, வாயைத் திறத்தலால் பிறக்கும் என்கிறது இது. ஆனால் பேரகத்தியம் ஆய்தத்திற்கு இடம் தலையாய் வாயைத் திறத்தலால் பிறக்கும் என்கிறது.அது.

'ஆய்தக் கிடம் சிரம் அங்கா முயற்சியாம்"

என்பது (77).

ஆய்தப் பிறப்பிடத்தில் முத்துவீரியத்தொடு பேரகத்தியம் மாறுபட்டுச் செல்லினும் இளம்பூரணரும், நன்னூலாரும் பேரகத்தியக் கருத்துக்கு முன்னவராக உள்ளனர் என்பது அறியத்தக்கது.

ககரமுதல் னகர இறுவாய் 18 எழுத்தும் மெய்யெழுத்து எனல் பண்டை இலக்கணர் காலந் தொட்டே இயல்வது. அவ்வகையில்,

  • ககர முதல் மூவாறும் காத்திர மாகும்” (காத்திரம் - மெய்)

என்கிறது முத்துவீரியம் (12). சார்பெழுத்தைக் கூறும் போதும், “சார்பு உயிர்மெய் தனிநிலை இருபாலன”

என்கிறது அது (22). ஆனால் பேரகத்தியம்,

"தனித்துமெய்த் தன்மையாய்த் தயங்கும் ஆய்தம்’

66

'ஆய்தம் மெய்போல் உயிர்பெற் றிலதாம்”

“ககரமுதல் மூவாறும் காட்டுமாய் தழுமெய்

"

(23)

(25)

(26)

எனத் தனிநிலை எனப்படுவதாம் ஆய்தத்தை மெய்யொடும் இணைத்தே கூறுகின்றது. இதனை முத்துவீரியரோ, முன்னவர் எவருமோ கூறினர் அல்லர்.

தனிநிலை என்னும் பெயரீடே மற்றொன்றன் கூட்டொடு கூடாதது என்பதை அறிவிப்பதாக அமைந்து கிடக்கவும் அதனை மெய்யொடு கூட்டிய பான்மை தமிழ்ம்மையொடு கூடாத கூட்டுறவு வெளிப்பாடே என்பதை வெளிப்படுத்த வல்லதாம்.