உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இரு சிறகுகளும் அடித்து எழும்பப் பறவையின் உடல் எழுவதுபோல இருபாலும் குறில் இருந்து இயக்க இயங்கும் எழுத்து ஆய்தம் என்னும் இலக்கணர் உவமையையும், 'ஆய்தம் உள்ளதன் நுணுக்கம்' என்னும் தொல்காப்பிய ஆணை மொழியையும் அறிவோர் ஆய்தத்தை மெய்யொடும் உடன் படுத்தார் என்க.

முன்னூல்களில் வெளிப்படை எனக் கருதிக் கூறப்படாத விளக்கங்கள் பின்னூல்களில் கூறப்படுதல் வழக்காகும்.

இலக்கண நூல்கள் மொழி முதலாம் எழுத்துகள் இவை எனத் தெளிந்துரைக்கும். ஆனால் பேரகத்தியம், மொழி முதலாம் எழுத்துகள் இவை என்பதுடன் மொழி முதலாகா எழுத்துக்கள் இவை என்பதையும் கூறுகின்றது.

"பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்"

(81)

“உயிர்மெய் யல்லவை மொழிமுத லாகா

(82)

என்பவை அவை.

"ஙகரமவ் வேற்றுச் சுட்டு வினாவொடாம்'

(187)

எ-டு :

என்பதும் முன்னவர் கூறாத பின்னவர் விளக்கமாம்.

அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

தொல்காப்பியர் ச, சை, சௌ என்பவை மொழி முதலாகா

என்று இலக்கணம் கூறினார்.

“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔவெனும் மூன்றலங் கடையே”

என்பது அது (மொழி மரபு. 29). ஆனால் இந் நூற்பா,

“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே

அவை ஒளவெனும் ஒன்றலங் கடையே

எனப் பாட வேறுபாடு கொண்டிருந்திருக்க வேண்டும் என்று இலக்கணர் ஆய்ந்து கூறுவர்.

இலக்கண விளக்க நூலார்,

66

"ஐஔ அலவொடு சகாரமும்"

(எழுத்து. 27)