உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் கீ

161

எனச் சகர முதன்மையை ஏற்றுக்கொண்டு யாத்தார். நன்னூல் மயிலைநாதரும் சகர முதன்மொழிச் சொற்களை அடுக்கிக் காட்டி நிறுவினார்.

நன்னூலார், பிரயோக விவேக நூலார், முத்துவீரிய நூலார் முதலியோர் சகரவரிசை பன்னிரண்டும் மொழி முதலாகுமெனக் குறித்தனர். பேரகத்திய நூலாரும் அவ்வழியையே தழுவிக் கொண்டுள்ளார்.

முன்னோர் மொழி பொருளையன்றி மொழியையும் பொன்னேபோல் பின்னவர் போற்றிக்கொள்வர் என்பது வழக்காறு. அவ்வழியில் முத்துவீரியனார் எழுத்திலக்கணப் பகுதியில்,

"உஊ ஒஓ ஒளவிதழ் குவிவே"

"அண்பல் அடிநா முடியுறத் தநவரும்

CC

"அண்ணம் நுனிநா வருட ரழவரும்"

எனக் கொள்கிறார் (46, 50, 72). இவை நன்னூலில் 23, 25, 28 ஆம் நூற்பாக்களாம்.

இவ்வாறு பேரகத்தியத்தார் முன்னோர் மொழியை வாங்கிக்கொண்டதாகக் குறித்திலர். குறித்திருப்பின் அதன் பின்முகத்தை நன்முகமாகக் காட்டிக் கொடுத்து விடுமே! ஆனால் அவர் முத்துவீரியர் நூற்பாக்கள் பலவற்றைப் போற்றிப் பொதிந்து கொண்டமை தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது:

“அஇ உஎ ஒக்குறி லாகும்" "அஇ உஎ ஒக்குறி லாகும்"

மு.8

பே. 12

(50.20

பே. 26

“உயிர்முதன் முப்பதும் ஒன்றற் கொன்றினம்'

“உயிர்முதன் முப்பதும் ஒன்றற் கொன்றினம்”

"உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும்" மு. 24

"உயிரே மெய்யூர்ந் துயிர்மெய் யாகும்" பே. 40