உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பாண்டியன் என்னும் பழம் பெயரே பாண்டவர் வழிவந்த தென ஓர் ஆய்வாளர்!

ஆய்வு!

ஸ்ரீவல்லபன் என்பதே திருவள்ளுவர் ஆயது என்பதோர்

கழகமா, களமா, தமிழா, அமிழ்தா எல்லாம் வடமொழியே என்பதோர் வாணவேடிக்கை!

மந்திரி மட்டுமன்று அமைச்சும் வடமொழியே என ஒரு வரிந்து கட்டல்!

திருக்குறள் என்ன பெரிய குறள்; மனுநீதி சாத்திரம், அர்த்த சாத்திரம், கதமசூத்திரம் இவற்றைத் தழுவிய நூல்!

திருக்குறளிலேயே நூற்றுக்கு மேல் வட சொல் உண்டு என்று பட்டியல்!

இப்படியெல்லாம் முடிவெடுப்பார் முன்னே 'பேரகத்தியம்' வாய்ப்பது வெறு வாய்க்கு உமி கிடைத்தது ஆகிவிடாதா?

தொல்காப்பியனார் பெயர் 'திரண தூமாக்கினி' என்பது என்றும், அவர் ய (ஜ) மதக்கினியார் மகனாரும் பரசுராமர் உடன் பிறந்தாரும் ஆவர் என்றும், அவர் நூலை அரங்கேற்றிய பாண்டியன் பெயர் மாகீர்த்தி என்றும், அவன் 24 ஆயிரம் ஆண்டு ஆட்சி செய்தான் என்றும் நச்சினார்க்கினியர் கூறும் புனைவு மொழியையே வாய்மை வரலாறாகக் கொண்டு தொல்காப்பியர் குடி என்பது 'விருத்த காவ்ய கோத்திரம்' சார்ந்தது என்று துணிந்துரைப்பவர்க்குப் பேரகத்தியப் பொய்ந் நூலும் மெய்ந் நூலாகத் தோன்றின் வியப்பாகாதே! ஆதலால் பேரகத்தியம் எனப் பவானந்தர் பதிப்பித்த முத்து வீரியத்திற்கு வழிநூலாக அமைந்த ஒரு நூலே என்று உறுதிப் படுத்துதல் வேண்டத் தக்கதாம்.

நூல்

வேதகிரியார் தம் நூலாகவோ, இயற்றியவர் பிறரொருவ ரெனின் அவர் நூலாகவோ, அவர் காலம் அறியின் இன்னது என்பதாகவோ வெளியிட்டிருப்பின் நூலொடு அகத்தியரைத் தொடர்வுறுத்தி இடர்ப்படுக்கும் நிலை ஏற்பட்டிராது. தமக்கு மூவாயிரம் நூற்பாக்கள் கிடைத்துளதாகக் குறிக்கும் குறிப்பால் பழமை காட்டவே அவர் கருதினார் என்பது வெளிப்படுகின்றது. இதனால் இப் பேரகத்தியம் அகத்தியர் பெயரால் செய்து உலவ விட்ட பொய்ந்நூலே என்பது வெளிப்படையாம்.