உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியத் திரட்டும் முத்துவீரியமும் - நூற்பா ஒப்படைவு பேரகத்தியத் திரட்டு

முதலாவது எழுத்திலக்கணக் காண்டம்

1. எழுத்துப் படலம்

முத்துவீரியம் - எழுத்தியல்

முன்னது பேரகத்திய நூற்பா; பின்னது முத்துவீரிய நூற்பா

எழுதப் படுதலின் எழுத்தா கும்மே

எழுதப் படுதலால் எழுத்தெனப் பெயர் பெறும்

1

எழுத்தொலி வடிவம் வரிவடி வும்பெறும்

எழுத்தொலி வடிவரி வடிவையு மேற்கும்

2

அநாதி யொலியெழுத் தாதிவடி வெழுத்தே

(இதற்குஒத்த நூற்பா முத்துவீரியத்தில்

இல்லை;

பிறவும் இவ்வாறே)

இரேகை வரிபொறி யிலேகையக் கரப்பெயர் இரேகை வரிபொறி எழுத்தின் பெயரே

3

எழுத்து முதல்சார் பிருவகை யென்க

அதுமுதல் சார் பென வாமிரு பாலன

முதலெழுத் திருவகை யாகியெண் வகையாம்

உயிருட லெனமுத லோரிரு வகைய

முதலுயிர் மெய்யாய்த முப்பா னொன்றே

அடிதலை தாளாதி யாமுத லின்பெயர்

4

5