உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

மொழிமுதல் அகரம் ஆவா கும்மே

அகர முதன்மொழி ஆகார மாகும்

எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் உயிர்வரில் அந்நும் ஒற்றுறில் அவ்வுமாம் நிர்துர் நிகுவி பொருளின்மை நிகழ்த்தும். வடமொழி உயிர்முன் வன்கணம் இயல்பாம். ஏயென் விகுதி எய்தும் பிள்ளைக்கே.

அஐ ஒளமுத லாகமந் திரிபாம்.

உரைகளிற் கண்ட - பேரகத்திய மேற்கோள் நூற்பாக்கள்

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின் றெடுபடும் இலக்கணம்

183

159

நெடிலும் நெடுமையும் தீர்க்கமும் நெடிற்பெயர்

பே.அ.தி.15

அவையே, அகம்புறம் அண்மை சேய்மை பொதுமைக்கணாம்

பே. அ. தி. 18

யாவென் வினாவே அஃறிணைப் பன்மை

விகுதி பெறுங்கால் ஐம்பாலினும் வினாவாம்

பே. அ. தி. 21

எழுவாய்ச் சந்தியின் இசைவலி இயல்பே வியங்கோள் விகுதிமுன் வலிஇயல் பாகும்

இரண்டன் விபத்தி எஞ்சில்வலி இயல்பே பெயரே அன்றிப் பிறவுரு பேலா

அதுவும் ஆதுவும் அவ்வும் உடையவும் ஆறன் உருபென் றறைதல் வேண்டும்

கூறு படுத்தலாற் கூற்றெனப் படுமே இட்டுவிட் டிரண்டும் வினையிடைச் சொல்லே

பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே அடிசில் புத்தகம் சேனை அமைந்த கதவ மாலை கம்பல மனைய

பே. அ. தி. 15