உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய ஐந்திறம்

உலகத் தமிழ்ச் சங்கத் தொடக்க விழா அழைப்பிதழில் 'ஐந்திறம் நூல் வெளியிடுதல்' என்னும் குறிப்பு இருந்ததை அறிந்த போது ஏற்பட்ட உவகைக்கு அளவில்லை. தொல்காப்பியம் சுட்டும் 'ஐந்திரம்' வாய்ப்பின் 'வாராது வந்த மாமணி' என்பதற்கு ஐயமேதும் உண்டோ?

அழைப்பிதழில் ‘ஐந்திரம்' என்பது 'ஐந்திரம்' என்பதாகவே இருந்தாலும், அதனை இயற்றியவர் இன்னார் என்னும் பெயர் இல்லாதிருந்தாலும், பழநூலா புதுநூலா என்னும் குறிப்பு அறியவாரா நிலையில் இரந்தாலும்,"நூலை எப்பொழுது காணபோம்! எப்பொழுது கற்போம்!' என்னும் ஏக்கமே அலைத்துக் கொண்டிருந்தது. "புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப்பர்" என்பது கம்பர் தொடராயிற்றே!

ஐந்திறம் தொல்காப்பித்திற்கு முந்து நூலே என்றும், 'மயன் என்பவரால்

அருளப்பட்டது என்றும் நூல் வெளி யீட்டின் போது நுவலப்பட்ட செய்தி தேனாகத் தித்தித்தது. முன்னரே அலைந்து வந்த ஆர்வத்தை அளவிறப்பச் செய்து எட்டா உயரத்திற்கு ஏற்றிவிட்டது.

நூல் வெளியீடும் ஆயிற்று. மேடையில் இருந்த ஒரு சிலர் கைக்குள் மட்டும் நூல் புகுந்தது. வேண்டி விலைக்குப் பெற விரும்புவார்க்கும் படியில்லை. வாய்த்தற்கரிய நூல், வாய்க்குங் கால் மேடையிலேயே வாங்க விரும்புவார்க்கும் வாயாமை "என்ன மூடு வேலை வேண்டியிருக்கிறது" என்று எண்ணத் தோன்றியது. நாள்கள் செலத்தரியாமல்" நின்ற நந்தனார் நிலைக்கே நூலார்வம் ஏவியது.

பின்னே ஒருவகையாகக் காலங்கடந்தேனும் நூலைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. நூலின் புறத்தோற்றம், அட்டைக் கட்டு, தாள்நேர்த்தி,அச்சீட்டு நலம் ஆயவை ஒன்றின்மேல் ஒன்றாய் உயர்ந்து சென்றன. மேற்பார்வையாலேயே நூலழகு வாய்ப்பதாயிற்று; புற அழகும் போற்றத் தக்க பெருமைக்குரியதே யன்றோ !