உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

மாண்புமிகு கல்வியமைச்சரின் அணிந்துரை, மாமல்ல புரச் சிற்பக் கலைக்கல்லூரி முதல்வர் அறிமுகம் ஆகியவை, போட்டி போட்டுக்கொண்டு நூற்சிறப்பையும் நூல்வரவையும் நுவல் பவற்றைப் படித்த அளவில் நொடிப்பொழுதும் விடாது குடித்தே தீரவேண்டும் 'தேன்' இந்நூல் என்னும் கிளர்ச்சி என்ன, வெறியே உண்டாயிற்று.

ஐந்திறம் தோன்றி எண்ணாயிரம் ஆண்டுகள் ஆகின்றன

வாமே!

தொல்காப்பியத்திற்கு முந்து நூலாமே!

மயன் என்பார் அருளியதாமே!

அம் மயனார் தந்தையார் பெயர் தாமரையும் தாயார் பெயர் கருங்குழலியுமாமே!

இயற்கையின் ஐந்தியல் இலக்கணத்தை மொழியில் ஏற்றி மூலத்தில் பிறந்திடும் ஐந்தெழுத்தில் தொடங்கி இறுதியில் எழுத்து சொல் பொருள் சுட்டு அணி என்ற ஐந்தியல் மரபை மயன் தோற்றுவித்துக் கொடுத்த ஐந்திறமாமே!

இருபத்தைந்து ஆண்டுகளின் முன்னே நான்கு ஆண்டுகள் தஞ்சை சரபோசி நூலகத்தில் தங்கிப் பத்திலக்கம் பாடல்களை மனப்பாடம் செய்துவிட்ட அரும்புலவர் வீரபத்திரர் மனத் தகத்துக் 'கொள்வாரின்றித் தேக்கி' வைத்திருந்து கொண்டு ஆக்கியதாமே!

தமிழ்த்துறை ஆராய்ச்சிப் பேரறிஞர் ஒருவர் அறிமுகப் படுத்தி மூதறிஞர் பலரிடம் கருத்துக் கேட்க (அவர்களெல்லாரும் பெயர் சுட்டிக் காட்டவும் கூடாத அத்துணைப் பேரறிஞர்கள் போலும்) அவர்கள் பாராட்ட இந்நூல் வெளிவருகின்றதாமே!

அவ்வாறாயின், உடனே குடிக்க வெறி வராதா? என்ன!

பாட்டு தொகைகளில் இடம் பெறாத பெயர் 'மயன்' என்பது. சிலம்பு, மேகலை, சிந்தாமணி, பெருங்கதை ஆகிய நூல்களில் தொலைக்காட்சி போலவும் கனவுக் காட்சி போலவும் காட்டப்படும் 'மயன்' செய்த நூலா ஐந்திறம்!

அடியார்க்கு நல்லாரையும் நச்சினார்க்கினியரையும் தப்பியோ இவ்வைந்திறம் இருந்தது? அதிலும் இந் நூற்றாண் டின் இடைக்காலம் தாண்டியுமா இருந்தது? என்னே விந்தை ! விந்தையிலும் விந்தை !