உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

187

தென்மொழிக் கலைச் செல்வர் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதர் கையிற்கும் தட்டுப்படாத விந்தை ! சரசுவதி மகால் நூல் நிலையத்தில் இந்நாள் காணப் பெறாமல் கரந்துறை விந்தை ! சரசுவதிமகால் நூற்பதிவு ஆவணங்கள் எதிலுமே இடம் பெறாது வீரபத்திரர்க்கு மட்டுமே தன் போரொளி காட்டிப் பெருமை பெற்றுக்கொள்ள இருந்த விந்தை !

"ஐந்திறம் என்ற தலைப்பில் ஒரு தொன்னூலானது தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் குவிந்து கிடந்த சுவடித் தொகுப்பிலே இருக்க அதனை ஒரு புலவர் பெருமகன் தன் மாணவப் பருவத்தில் மனப்பாடம் செய்துள்ள செய்தியினைக் கேட்டு அகமகிழ்ந்து எழுதச் செய்து அந்த நூலைப் பல அறிஞர் பெருமக்களிடமும் ஆய்வாளர்களிடமும் காட்டி ஒப்புதலும் பெற்று இன்று அச்சேறிய நூலாக அது தமிழ்ப் பெருமக்களிடம் பெருமகிழ்ச்சியுடன் வழங்கப்படுகிறது" என்கிறது அணிந்துரை.

குவிந்து கிடந்த சுவடித் தொகுப்பாம்! மாணவப் பருவமாம்! மனப்பாடமாம் !

"புலவர் வீரபத்திரனார் சுமார் இருபத்தைந்து ஆண்டு களுக்கு முன்பு தஞ்சாவூர் சரபோசி மன்னர் பாதுகாத்து வைத்திருந்த நூல் நிலையத்தில் நான்காண்டு காலம் தங்கி யிருந்து அந்நூல்களையே மனப்பாடம் செய்துவிட்டார்."

அதுவும் எத்தனை பாடல்கள்?

"நான்காண்டு காலத்தில் பத்து லட்சம் பாடல்களை மனனம் செய்து வைத்துக்கொண்டார். அவர் தம் நினைவாற்றல் தான் எத்தனை வலுவானது”

'மயன் இயற்றிய ஐந்திற நூலில் மொழி இலக்கணம் மட்டுமல்லாமல் ஓவியக்கலை சிற்பக்கலை கட்டடக்கலை

இசைக்கலை மற்றும் நாட்டியக்கலை

சைக்கலை மற்றும் நாட்டியக்கலை ஆகிய நுண் கலைகளின் இலக்கணங்களும் அவற்றைச் சார்ந்த அறிவியல் நுட்பங்களும் பெருமளவில் வருகின்றன. எனவேதான் தொல்காப்பியர் அவற்றை முழுமையாகக் கொண்டிடாமல் மொழியிலக்கணத்தை மட்டும் பிரித்தெடுத்துத் தம்முடைய இலக்கண நூலை ‘ஐந்திறம்' நிறைந்த தொல்காப்பியம் என்று சொல்லிக் கொண்டாரோ என நினைக்க வேண்டியிருக்கிறது."

"முதற்சங்க காலத்தில் பிறந்த சிற்பி மயன் நிலந்தரு திருவிற் பாண்டியனால் ஆதரிக்கப் பெற்றுக் குமரி மாநிலத்தில் கடல் முல்லை என்ற ஊரில் சிற்பக் கலைக்கூடம் நிறுவி, தன்னால்