உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

நிறுவப்பட்ட மரபுசார் சிற்பக் கலையினை மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கலைத்தொண்டு செய்து வந்தான். தில்லை மாநகர் தனில் ஒளிநடராசனுக்குக் கோயில் கட்டி அதனைப் பொன்ன வையாக ஆக்கி இன்று உலகம் போற்றும் ஐந்து உலோகத் தாலான ஆடவல்லானின் திருவுருவையும் அவனே ஆக்கியமைத்துப் போற்றியும் வந்தான்.

ப்

"கபாடபுரமாகிய மதுரை மூதூர் காலத்தால் இடப் பெயர்ச்சியாகி இன்று மதுரையாக விளங்குகிறது.”

என்றெல்லாம் ஐந்திற அறிமுகவுரை நீள்கின்றது.

'மயனே என ஐயுறும் தச்சன்' என்னும் சிந்தாமணிக்குத் தொழிலால் மயனே எனத் துணிந்து வடிவால் ஐயமுறும் தச்சன் என்று உரை விரிக்கும் நச்சினார்க்கினியர் (234) உரைபோலவே ஐயமுண்டாகும் விந்தை !

இனி நூல் ஐந்திறம் ஆயிற்றே. ஐம்பகுப்பு எவை என்று பார்த்தால், நூல் ஐந்திறந்தான்; பகுப்பு என்ன வேண்டிக் கிடக்கிறது? 285 பக்கங்களில் 892 நூற்பாக்களில் இயலும் ஒரு தொடர் ஐந்திறம் ! ஒழுங்கமைந்த ஒரு நூலாக இருந்தால் அல்லவோ வகுப்பும் பகுப்பும் தலைப்பும் செய்தியும்!

அடை

ம்

'ஐந்திறம்' 'பழந்தமிழ் இலக்கணம்' 'நூற்பா' என்னும் முக்குறிப்புகள் மட்டுமே முதற்குறிப்புகளாய் அமைந்துள்ள நூலில் ஐந்திறத்தை எவர் காண்பார்? எவர் பகுப்பார்? பகுப்பு என ஒன்று இருந்தால் அன்றோ பகுத்துப் பார்க்க முடியும்?

என்ன படித்தோம் என்பது ஒரு பக்கத்தில் புலப்பட வேண்டா; நூல் முற்றும் பார்த்த பின்னராவது புலப்பட வேண்டாவா? எதுவுமே புலப்படாமல் சொல்லடுக்கே அமைந்த நூலில் பொருளுக்கு என்ன வேலை?

'ஐந்திரமோ' 'ஐந்திறமோ'-போகட்டும். எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலில் நூற்பா என்னும் சொல்லாட்சி எப்படி வந்தது?

ஆட்சி

நன்னூலுக்குப் பின்னூல்களும் அறியாத நூற்பா என்னும் தான்னூலாம் தொல்காப்பியத்திற்கும் முன்னூலாம் ஐந்திறத்தில் முதற்கண் நிற்பானேன்?

பாவகைகளைக் கூறும் தொல்காப்பியம் நூலினான உரையினான என்பதைக் கொண்டல்லவோ சூத்திரம் என்பதை