உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் -36

காலமும் விரைவும் கணக்குறுந் திறத்தால் கால நுட்பம் கணித்தினி தாய்ந்தே நொடிநொடி இமைப்பியல் இம்மியும் கருதி கடிதுறும் கால விரைவியல் ஆக்கம் தேர்த்துகள் பொழுதும் ஏர்க்கலை நொடியும் சீர்க்கலை நுண்மை திருநெறி ஆய்ந்தே காலத் தியல்நெறி கணித்துறும் நுட்பம் மூலத் திருநெறி முன்னுறும் ஆற்றல் எண்ணியல் ஐந்நெறி இயல்புற நோக்கி விண்ணிமைக் காலம் வியப்புற் றோர்ந்து பண்ணிமைக் காலம் பாங்குற நோக்கி

எண்ணிமைக் காலம் இயல்புற் றாய்ந்து மண்ணிமைக் காலம் மயலறத் தெரிந்தே கண்ணிமைக் காலம் கருதி யுணர்ந்தே காலச் சுழல்நிலை அறுபான் நான்கியல் மூலம் ஐயைந் தியல்நெறி நோக்கி சிற்றவை எண்ணிலை எட்டெட் டியலால் உற்ற மாநெறி ஓங்குறுந் திறநிலை எண்ணென் இயல்தெரி கலையியல் ஆக்கம்

விண்கலை நுண்கலை வியனுறத் தெரிந்தே

எண்கலை இயலால் எண்முறைத் தெரிந்தே நுண்கலை நுட்பம் நுவலு மாக்கலை காலத் தியல்தெரி கணக்கியல் உன்னி

மூலமும் பொருளும் அறிதல்மா நெறியே

இக் காலக் கணிப்புகளை எல்லாம் முந்து நூல் கண்டு முறைப்படத் தொகுத்த ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியர் போற்றிக் கொள்ளாதது என்னே ! போற்றிக் கொள்ளாது விடுப்பின் குன்றக் கூறல் குற்றம் அவர்பாற் சேருமே ! இவை வெற்றெனத் தொடுத்ததாய் எண்ணி விடுத்தார் என்னின் இவர் நூற்குப் பழியாகுமே ! முன்னூற் பெயரிட்டு அந் நூற்கும் பின்னூற்கும் செய்யும் பெருமையோ இது.