உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

195

'ஓம்பு' என்பது தமிழ் ஏவல். விருந்தோம்பல், உடலோம்பல், ஊன் ஓம்பல், உயிரோம்பல் என்று ஓம்பல் வரும். பேணல், காத்தல், போற்றிக்கொள்ளல் பொருளது.

“ஓம்பினேன் கூட்டை வாளா

என்ற நாவரசர்,

t

"ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்”

55

என வேண்டிக்கொள்வார் ஒற்றியூர் உடையகோவிடம்.

'மொழிமுதல் ஓம்' என்று மயனார் ஐந்திறப் பெயரால் கூறுதல், பழையோர் தலைமேல் புதியோர் வைக்கும் பொருந்தாச் சுமையாகும்.

64

'கண்ணிமை கைந்நொடி காலமாத் திரையே'

என்பது பதினான்காம் நூற்பா. இக்கால மாத்திரை நடிக்கும் நடிப்பு கண்கொள்ளாக் காட்சியாம்:

கண்ணிமை விண்ணிமை மண்ணிமை எண்ணிமை

பண்ணிமை ஐந்தும் காலக் கூறே

(13)

இமைநொடி யளவே எண்டருங் காலம்

(23)

விண்ணிமை மண்ணிமை நுண்ணிமை காலம்

(24)

பண்ணிமை கண்ணிமை எழுத்தியல் கூறே

(25)

கண்ணிமைப் பொழுதும் கைந்நொடிக் காலமும்

எண்ணியல் நெறியால் காலம் ஓர்ந்து

திண்ணிய உளமும் உழைப்புணர் வுற்றே

நண்ணுவார் காலத் தியலறி மாக்கள்

(93)

காலத் தியலைக் கணக்கறிந் துணர்ந்தே

கண்ணிமை கைந்நொடி மாத்திரை அளவாய்

சீலத் துன்னி ஒலியிசை நெறியை

கோலக் கட்டியல் குறிப்பது மரபே

(112)

நொடிநொடி மூலம் நெடிதுற நோக்கின்

நொடியம் இமையம் காலம் குறிக்கும்

(175)

இதுவே தொடர்கதை. இறுதியது ஒன்று காண்க (874) :