உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

சட்டத்தை இயற்றுவோரே சட்டத்தை மதித்திலர் என்னின் சட்டம் என்பதன் பொருள்தான் என்ன?

இந் நிலையில்தான் நுதலிப் புகுதல், முறைநெறி வைப்பு, தெளிவுடைமை ஆகியவற்றையே ஊடகமாகக் கொண்டு நூல் செய்த ஆசிரியர் தொல்காப்பியனார் எட்டற்கரிய பனிமலைக் கொடுமுடிமேல் நின்று குறுமுறுவல் காட்டுதல் தெளிவாகும்.

ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும் இடை இடையிலும் 'இன்னது சொல்வேம்' என்பதுடன் 'இன்னது சொன்னோம்' என்றும் முறைமுறை நூலைக் கொண்டு சென்று நிலை று பெறுத்தும் திறம் பளிச்சிட்டு அவர்தம் அடிப்பொடியையும் முடிக்கணியாகச் சூடிக் கொள்ள ஏவுகின்றதாம்.

நூல் என்பதே இலக்கணக் குறியீடு. நுவல்தல் வழியாக வந்ததே நூல். சொல்லிச் சொல்லித் தழும்பேறிய பின்னே எழுத்து வடிவு பெற்றது நூல். அதில் தெளிவும் செப்பமும் கட்டாயம் இருக்கும்; இருக்க வேண்டும். அவ்வுட் கிடையாலே தான், நூலுக்கு அழகு கூறும் நூற்பா 'சுருங்கச் சொல்லல்' என்பதை முதற்கண் வைத்து, 'விளங்க வைத்தல்' என்பதை அடுத்தே வைத்தது.

அவ்வாறே நூற்குற்றம் இவையெனக் கூறும் நூற்பா 'குன்றக் கூறலை' முதற்கண் வைத்து, அதனை அடுத்தே 'மிகை படக் கூறலை' வைத்தது. தொடர்ந்து வெற்றெனத் தொடுத்தல் மயங்கவைத்தல் முதலியவற்றையும் விலக்க ஏவியது.

நூலழகு நூற்குற்ற நூற்பாக்களை முன்வைத்து இவ் வைந்திறத்தை ஆய்ந்தால் முன்னதற்குக் கைவிரிப்பும், பின்னதற்குக் கைதாங்கா அளவும் எளிதாகக் கிட்டும்.

முன்னே ஐந்திற நூற்பாக்கள் இரண்டு சுட்டப்பட்டன. இவ்வாறு தெளிவான ஓட்டத்தில் பொருள் காணவரும் நூற்பாக்கள் மிக அரியனவாம்.

“மொழிமுதல் ஓமென் றுரைத்தல் வழக்கே”

என்பது நான்காம் நூற்பா. ஓம் தொல்லோர் ஆட்சியன்று. மொழி முதலும் ஓம் அன்று. பின்னாளைச் சமயச் சார்பு விரி அது.

தமிழ் 'ஓம்' சொல்லீறாம். அது பன்மையீறு; பலரையும் இணைத்து ஒருமையாக்கும் ஈறு; போவோம் வருவோம் கற்போம் நிற்போம் முதலியவற்றில் உள்ள சொல்லீறு காண்.