உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

193

இக்காலப் 'பல்பொருள் அங்காடி' என்ன, மருந்து கடை என்ன, துணிக்கடை என்ன எங்கும் வைப்பு முறை போற்றலே வழக்கு. அதன் நலப்பாடோ பெரிதினும் பெரிது.

வைப்பு முறை பேணார் ஒரு பொருளை எங்கோ வைத்து விட்டு அதனைத் தேடி எடுத்தற்குப் படும் பாடும் செலவிடும் பொழுதும் பட்டறிவுடையார்க்குத் திட்டமாகத் தெரிந்தவை.

பல இலக்கம் நூல்கள் இருக்கும் ஒரு 'நூலகம்' ஆயின் என்ன,பல்லாயிரம் நூற்பாக்களையுடைய ஒரு 'நூலினகம்' ஆயின் என்ன, வைப்புமுறை செவ்விதின் அமைந்திருப்பின் இடரின்றி வேண்டுவதை எடுத்துக் கொள்ளலாமே! வைப்புமுறை என ஒன்று இல்லாக்கால் அதனை வைத்திருந்த பேறும் இல்லையாய்ப் போதலன்றோ கண்ட காட்சி.

இவை இவ்வாறாகவும், முதல் நூற்பா முதல் இறுதி நூற்பா முடிய எங்கும் வைப்பு முறை பேணாத நூலாக ஐந்திறம் உள்ளது. அன்றியும் கூறியது கூறலாக அமையாத சொல்தானும் இல்லை எனின், நூற்பா ஒன்றனைக் காணவும் கூடுவதோ?

கூறியது கூறல் என்று சுட்டுவதும் எண்மையாய் அன்று, "கூறியது கூறல் குற்றம் இன்று. வேறொரு பொருளைப் பயக்கு மாயின்" என்னும் இலக்கண விதிவிலக்குப் பற்றிய தெளிவொடு பார்ப்பினும் கூறியது கூறலாய் வருவன ஒருமுறை இரு முறையா? இருபது முறை முப்பது முறைகளா? கூறியது கூறலே ஒரு நூலாகும் எனின் அதன் பெயர் இவ்வைந் திறந்தானோ என எவரும் அறிவார் !

தொடக்க ஓம் பார்க்க (1). தொடர்ந்தும் ஓம் பார்க்க. ஓம் கலை; ஓம் நெறி; ஓம்மறை பார்க்க (885) ! இடையே வரும் ஓம் எண்ணின் எத்தனை நூறு ஓம்!

தொல்காப்பியத்திலோ பாட்டுத் தொகைகளிலோ இடம் பெறா ஓமே இவ்வாறு பயில வருமானால் பிறவற்றைச் சொல்வானேன்? மயனார் மாநெறி மாண்பினதே !

“நுதலிப் புகுதல் நுவல்வோன் திறனே" (373)

“முறைநெறி வைப்பே முன்னிய கிளக்கும்" (378)

என்பவை ஐந்திறம். நுவல்வோன் திறனைக் காட்டும் நுதலிப் புகுதலும் முன்னிய கிளக்கும் முறைநெறி வைப்பும் ஐந்திறத்தில் எதிர்பார்த்தால் முழுதுறும் ஏமாற்றமேயாம்!