உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

எம்மரபுப் பாவும் உகரம் கெட்டுவருதலை ஒப்புவதில்லை. மயன் நெறி மாநெறி என்னும் ஐந்திறமோ உகரக்கேடு பற்றிக் கருதாமல் அசைச் சீராகித் தளைகெடுதல் பெருவரவுடையது. அன்றியும் உகரம் கெடும் என்னும் எண்ணம் உண்டாகிய இடங்களிலெல்லாம் ஏகாரம் இட்டு இசைத்து நிரப்புதல் அதனினும் பெருவரவுடையது.

விருத்தம் என்னும் பாவினம் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ அறியாப் பின்வரவினது. மயனார் அறுசீர் விருத்தம் பாடுகின்றார்:

15

"நிலந்தரு திருவின் வேந்தன் நற்றமிழ் அவைக் களத்தே’ என்னும் தொடக்கம் முதல் மூன்று, அறுசீர் விருத்தங்கள் பாடியுள்ளாராம் ! அவை எந்நூலில்? ஏன்? புரியவில்லை. அறிமுகத்தார்க்கும் ஆசிரியர்க்குமே வெளிச்சம்.

"சிரத்தினால் போற்று கிறேன் சிறியோன் மயனேயன்றோ மயனார்க்கு மறந்தும் கூட இவ்வளவு சிறுமை சேர்த்தல் தகுமா?

.

'மயன்தமிழ் ஒளிநெறி' 'மயன் நெறி ஒளித்தமிழ்' 'மயத்தமிழ் மாத்தமிழ்' (865) 'மயன்நெறி' 'மயன் கலை,' 'மயன்தமிழ்,' 'மயன் வகு நெறித்தமிழ்,' (866) 'மயன் நெறி ஒளிநெறி,' 'வண்டமிழ் மயன்நெறி' (868) 'மயல்நெறி நீங்கல் மயன்நெறி மரபே' (884) 'மயலற நோக்கி மயன்நெறி ஒர்ந்து' (884) 'அயல்நெறி சாராத் தமிழொளியுணர்வால் மயத்தமிழ்ச் சிற்பி' (893) இப்படி மாண்புறு மயனார் தம்மையும் தம் நெறியையும் எப்படித்தான் தலைகால் தெரியாமல் புகழ்ந்து கொண்டாரோ? மயனாரை இத்துணைச் சிறுமைக்கு ஆக்கத் திட்டமிட்டாலும் எவர்க்கும் இயலாதாம்!

ஐந்தறைப் பெட்டியைத் தமிழ்மண் நன்றாக அறியும். ஐந்து அறைப் பகுப்பு மட்டுமன்றி, 'இத்தட்டில் இப்பொருள்' என வைப்பு முறையும் அதில் உள்ளமையால் எங்கோ பார்த்துக் கொண்டும் எந்தப் பொருள் வேண்டுமோ அந்தப் பொருளை எடுத்துக்கொள்ளக் காண்கிறோம்.

பெரிய பலசரக்குக் கடையே எனினும் எடுத்துக் கொடுப்பதற்கும் எடுத்துக் கொடுப்பதைப் பிடித்து ஏற்றற்கும் அமர்த்தப்பட்ட எடுபிடிச் சிற்றாள்களும் எளிமையாக இடம் கண்டு, இனம் கண்டு பொருளை எடுக்கக் காண்கிறோம்.