உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் இ

191

கழகம் என்பதொரு பழஞ்சொல். அது வள்ளுவத்திலும் (935, 937) கலியிலும் (136) ஆளப்பட்டுள்ளது. எப் பொருளில் ஆளப்பட்டுள்ளது? சூதாடும் இடமே 'கழகம்' என்பது அக்காலப் பொருள்.

கழகம் என்பதற்குக் கலைபயில் இடம் என்னும் பொருள் கண்டவர் கம்பர். "கந்தனை அனையவர் கலைதெரி கழகம்” என்றார் அவர் (பால.93)

கழகம் என்பதற்குத் தமிழ்ச்சங்கம் எனப் பொருள் விரித்தவர் திருவிளையாடற் பரஞ்சோதியார். "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ்" என்றார் அவர் (திருநாட்டு. 57)

கழகம் என்னும் சொல்வரலாறு இவ்வாறாகவும் ஐந்திறம், "தீந்தமிழ்க் கழகச் சான்றோர்" என்கிறதென்றால் (892) எப்படி அது முந்தை நூலாம்?

ருபதாம் நூற்றாண்டில் அயல் நெறிகள் படைபடை யாய்ப் புகக் காண்கிறோம். தொல்காப்பியர்க்கு முந்தைக் காலத்தே "அயல் நெறிப் புகவு உண்டா?" "அயல்நெறி சாராத்தமிழ்' (862) என்கிறதே ஐந்திறம் !

ஐந்திறம் நூற்பாவால் இயன்றது என்னும் குறிப்பைக் கண்டோம். நூற்பா எனின் அகவல் நடைத்தேயன்றி அகவலே யன்று. சீரடியுண்டு. அசையடியும் கூனாதல் உண்டு. இருசீர் முச்சீர் அடிகளும் உண்டு. ஆனால் ஐந்திறமோ எங்கும் நாற்சீர் அடியை அன்றி முச்சீர் அடிதானும் கொண்டிலது. ஓரடியானும் ஈரடியானும் வந்தாலும் அகவலடியாகவே அமைந்துளது.

மேலும் அகவல் எனின் அதன் முடிநிலை தேமா, புளிமாச் சீர்களில் ஏயென முடிதல் சங்கத்தார் போற்றிய நெறி. பாட்டு தொகைகளில் உள்ள எந்த அகவலை எடுப்பினும் இந்த நெறியில் மாற்றம் இல்லை. ஆனால் ஐந்திறத்தார் அகவலோ பாடலே (71) ஆய்வரே (78) எண்ணறிவாளனே (73) பேரறிவாளனே (74) உச்சியே (771) ஆற்றலே (749) நுட்பமே (884) மெய்ந்நெறி (891) எனக் கூவிளச் சீரிலே முடிந்துள்ளது.

உணர்வனே (75), அறிவரே (135,254), திறமுறும் (190), சிறக்குமே (296), இலங்குமே (231), தெரிவரே (258), நவிலுமே (772) எனக் கருவிளச் சீரிலும் முடிந்துள ! இவை முன் வழக்கன்றாம். பின்வழக்கெனினும், பிழை வழக்காகும்.