உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

முதல் ஐம்பது நூற்பாக்களுள் மட்டும்,

ஐந்தியல் மொழியாய்

(10)

ஐந்தியல் தமிழே

(33)

ஐந்தியல் தமிழிந் நூல் (35)

செந்தமிழ் ஐந்தியல் நூலே

ஐந்தியல் அறிவரே

(38)

(39)

ஐந்தியல் செந்தமிழ் ஐந்திற நூலே

ஐந்தியல் கோலம். ஐந்திற நூலே(42)

ஐந்திறம் உரைப்பதிந் நூலே

(40)

(43)

ஐந்திறம் ஆய்ந்தோர்

(44)

ஐந்தியல் வரம்பாய் ஒளிவளர் ஐந்திறம்

(45)

ஐந்திறத்தியல் நெறி

(46)

ஐவகை ஆய்தல் பெருங்கலைத் திறனே

(50)

என இத்தனை முறை என்றால் நூல் முழுவதும் வரும் ஐந்தைத் திரட்டின் ஐம்பது பக்கம் சேர்ந்துவிடும்.

“எழுத்தே சொல்லே பொருள்சுட் டணியென

வழுத்து மைந்தியல் முறைநெறி வழக்கே”

(9)

“எழுத்தும் சொல்லும் பொருளும் விளக்கி வழுவிலாக் கட்டணி வளமுற வகுத்து செழுமலர் ஐந்திதழ் செம்மலர் என்ன முழுத்தமிழ் ஐந்தியல் நூல்நெறி யன்றோ"

(36)

“தெள்ளு தமிழியல் எழுத்தியல் வகுத்து

விள்ளும் சொற்பொருள் கட்டணி வகையால் உள்ளும் ஆற்றலை உரைப்பதிந் நூலே”

(37)

இன்னும் எத்தனை முறைதான் ஐந்தியலைக் கூறுவது? ஐம்பகுப்பு என்பதற்கு ஐம்பது நூற்பாவா? நூறு நூற்பாவா? இலக்கணம் சொன்னால் அல்லவோ அதற்கென நூற்பா வேண்டும்? இப்படி எண்ணியே நூலாக்க வேண்டும் என்றால் எண்ண வேண்டியது தானே!