உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தமிழே உலக முதன்மொழி என்றும், அத்தமிழ் தொன்னிலமாம் தென் தமிழ்க்குமரி நிலமே என்றும், அத்தமிழே உலகெலாம் பரவிச் சென்றது என்றும் உள்நாட்டு வெளி நாட்டுப் பேரறிஞர்கள் அறிவியல் முறையால் ஆய்ந்தும் வெளியிட்டும் வருவது இந் நூற்றாண்டுக் கொடையாம். இக் கொடையை அறியும் நாம்,

“பைந்தமிழ் ஒலியே பாரொலி”

(548)

“தென்மொழி பன்மொழி மூலம்"

(810)

“தென்மொழி முதன் மொழி"

(223)

(810)

“உயிர்க்குல முதன் மொழி"

எனவரும் ஐந்திறத் தொடர்களை அறிந்து இறும்பூது எய்து கிறோம்:

எம்மொழிக் கலப்பும் இயையாப் பழநாளில் 'தனித்தமிழ்' என்னும் ஆட்சியில்லை. 'தமிழ்' என்பதே தனித்தமிழாக இருந்தமையால் தனிச்சுட்டு வேண்டத் தக்கதில்லையாய் இருந்தது. கலப்பு மிகுந்த பின்னாளில் "ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ? -?" என்று நாணுத்தகவின்றி, 'ஈசான தேசிகர்' நகையாண்டி செய்த நகையே தனித்தமிழ்ப் பெயராட்சியைத் தமிழுலகுக்குத் தந்ததும் தனித்தமிழ் இயக்கம் கால் கொள்ளத் தூண்டலாய் அமைந்ததுமாம்! ஐந்திறம், 'தனித்தமிழ்' 'தனித்தமிழ் ஐந்தியல்' என்னும் ஆட்சிகளைப் பெருக வழங்குவதுடன் 'தனித்தமிழ் நூலொன்று ஈதோ' என எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்தது; அவ்வகையில் அருமைப்பாடு உடையதாம்.

தமிழைத்தான் ஐந்திறத்தார் எத்துணை வகையாகக் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கிறார்.

அயல்நெறிசாரத் தமிழ் தமிழ் எண்டமிழ்

அருந்தமிழ்

தனிமொழி

அழகுறுந் தீந்தமிழ்

கலைமொழித்தமிழ்

இயற்றமிழ்

களித்தமிழ்

இன்றமிழ்

கோலத்தமிழ்

உயிர்க்குல முதன்மொழி

செந்தமிழ்

ஒலிமொழித்தமிழ்

தண்டமிழ்

கலைத்தமிழ்

தனித்தமிழ்

தலைமொழி

தலைமொழித்தமிழ்