உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

199

தீந்தமிழ்

பண்தமிழ்

தூநெறித்தமிழ்

பழகுதமிழ்

தெள்ளு செந்தமிழ்

பூந்தமிழ்

தெளிதமிழ்

பைந்தமிழ்

தென்றமிழ்

மயத்தமிழ்

தென்மொழி

மயன்தமிழ்

ஐந்தமிழ்

மாத்தமிழ்

ஐந்தியல் தமிழ்

முத்தமிழ்

ஐந்தியற் செந்தமிழ்

முதன்மொழி

ஒண்டமிழ்

முழுத்தமிழ்

ஒலித்தமிழ்

விண்டமிழ்

நவையறுஞ் சிற்ப நற்றமிழ்

விண்ணொளித்தமிழ்

நற்றமிழ்

நன்மொழி

வெளித்தமிழ்

இவ்வாட்சி, வழக்கம்போல் பல்கால் பயின்று வருவனவே என்பதைக் குறிக்க வேண்டுவதில்லையாம்!

அரங்கம் அளக்குங் கோலின் அளவு இருபத்து நால்விரலெனக் கூறுவார் இளங்கோவடிகளார் (சிலம்பு 3 : 100). அதனை விளக்கும் அடியார்க்கு நல்லார், "அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள்; தேர்த்துகள் எட்டுக்கொண்டது இம்மி; இம்மி எட்டுக் கொண்டது எள்ளு; எள்ளு எட்டுக் கொண்டது நெல்லு; நெல்லு எட்டுக் கொண்டது பெருவிரல் எனக் கொள்க" என்பார். இச் செய்தி ஐந்திறத்தில்,

"எட்டணு தேர்த்துகள் நெறியென் றாகி எட்டு தேர்த்துகள் இம்மி நிலையாய் எட்டுறும் இம்மி எள்ளென் றாகி எட்டெள் ளொருநெல் அளவை குறித்தே எட்டுறும் நெல்கை விரலெனக் கண்டே அளவை ஆக்கம் அறிதல் கலையாய்”

என்று வருகின்றது (676).