உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இதில் நெறி, நிலை, ஆகி, அளவை குறித்து, கண்டு என்பவை பொருள் நயம் வாராச் சொற் செறிப்பாக இருப்பினும் சிலம்பை நிலைவுறுத்தும் சீர்மை இன்பம் சேர்ப்பதாம்.

அமிழொலி என்று முன் வந்தால் இமிழொலி, குமிழொலி, தமிழொலி, உமிழொலி எனத் தொடர்கின்றன (769).

ஆழ்மதி என்று எடுத்தால் பாழ்மதி,வாழ்மதி,வீழ்மதி,வளர்மதி, குறுமதி பெறுமதி எனத் தொடர்கின்றன (883).

இவ்வாறே எண்வகை, விண்வகை, பண்வகை, பாவகை, கண்வகை, கலைவகை, மண்வகை, புனல்வகை, உள்வகை, வெளிவகை, உளிவகை, ஒளிவகை என 'வகை’ தொடர்வதும் (872)

வாள்வலி, வில்வலி, வேல்வலி, தோள்வலி, சூள்வலி, நாள்வலி என 'வலி' தொடர்வதும் (882)

சீர்நெறி, தேர்நெறி, நேர்நெறி, ஓர்நேறி (870)

நன்னெறி, தொன்னெறி, பன்னெறி, புன்னெறி, மன்னெறி (882) என 'நெறி' தொடர்வதும்

ஒரு பொருள் பல்பொருள் பெரும்பொருள் நுண்பொருள், பருப்பொருள், கருப்பொருள் விழுப்பொருள் (219) எனப் 'பொருள்' தொடர்வதும் இவைபோல்வன பெருகிப் பெருகிப் படர்வதும் எண்ணத் தொலையா 'காலம்' 'இடம்' பற்றிய அடுக்கோ நீக்கமற நிறைந்தவை.

வந்த சொல்லே அடிதோறும் மீண்டு வரும் மடக்கோ அளவிடற்கரிது. ஆடலான் பத்தடிகளில் முன்னிற்பான் (814) பதினான்கடிப்பாவில் பதின்மூன்று ஒளியும் ஒரு தெளியும் வந்த அள வில் நிற்காமல் அடுத்த பாவின் ஆறடிகளையும் ஆட் கொள்ளும் (484,485) மாநெறி பதினைந்து அடிகளிலும் 'தூ நெறி' பதினாறாம் அடியிலும் டம் பெற்றது ஒரு LIIT (842) மாநெறியாவது மயநெறி.

மோனைத் தொடையா, எதுகைத் தொடையா, முரண் தொடையா - யாப்பியல் கூறுவன அனைத்துக்கும் எடுத்துக் காட்டு அடுத்த பக்கத்தெல்லாம் காணலாம். அதனால் பொருள் வளம் பொருந்தாத் தொடைவளம் காட்டும் யாப்பியல் நூலாய்க் கோப்புற அமைந்தது இந்திறம் எனிற் பொருந்துவதாம்.