உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

சிரியர் தொல்காப்பியர், அகத்தியர் மாணவர் பன்னிரு வருள் ஒருவர் என்பது நெடிய வழக்காக உள்ளது.

"தென்மலை இருந்த சீர்சான் முனிவரன்

தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும்”

என்பது புறப்பொருள் விளக்கச் சிறப்புப் பாயிரம்.

அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் என்றும், அவரொடு அகத்தியரிடம் பயின்றவர் பன்னிருவர் என்றும் இப்பாயிரம் சுட்டுகிறது. நம்பியகப் பொருளுக்கு இரண்டு சிறப்புப் பாயிரங்கள்உள ஒன்றில்,

"தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ்

கெழீஇய அகப்பொருள் தழீஇ'

99

அகப்பொருள் நூல் இயற்றப்பட்டதாகவும், மற்றொன்றில்

“மலயத் திருந்த,

இருந்தவன் தன்பால் இயற்றமிழ் உணர்ந்த

புலவர்பன் னிருவருள் தலைவன் ஆகிய

தொல்காப் பியனருள் ஒல்காப் பெரும்பொருள் அகப்பொருள் இலக்கணம் அகப்படத் தழீஇ"

அகப்பொருள் நூல் இயற்றப்பட்டதாகவும் குறிப்புகள் உள.

இவற்றால் புறப்பொருள் வெண்பாமாலை இயற்றிய ஐயனாரிதனாரும் நம்பியகப் பொருள் இயற்றிய நாற்கவிராச நம்பியாரும் அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் எனக் குறிப்பிடுகின்றனர். அகப்பொருள் பாயிரம் இரண்டுள் பின்னது, பிற்காலத்ததாகவும், தொல்காப்பியரை இணைத்ததாகவும் கருத இடம் உண்டு.