உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

மேலும், பன்னிருபடலம்,

"ஆனாப் பெருமை அகத்தியன் என்னும்

அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல்

பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்”

என்று கூறுகிறது.

இறையனார் அகப்பொருள் உரை முச்சங்க வரலாறு கூறுகின்றது. நூலில் பாயிரம் என ஒன்று இடம் பெறவில்லை. எனினும், "எந்நூல் உரைப்பினும் அந்நூற்குப் பாயிரம் உரைத்து உரைக்கற்பாற்று" என்று பாயிரம் கூறி, முச்சங்க வரலாறும் கூறுகின்றது.

அதில் முதற் சங்கமிருந்தார் அகத்தியனாராகவும், இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் ஆகவும் சுட்டப் படுகின்றனர். முதற் சங்கத்தார்க்கு நூல் அகத்தியம் எனக் கூறும் அது, "இடைச்சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும் பூத புராணமும் என இவை என்கிறது.

கடைச் சங்கத்தார்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமும் என்கிறது அது. இடைச்சங்கம் இருந்த அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், கடைச்சங்கத்து இருந்தார் அல்லர். அவர்தம் நூல்கள் இருந்தன என்பதைக் கூறுகின்றது.

இவற்றால் முதலிரு சங்கங்களிலும் அகத்தியனாரும், இரண்டாம் சங்கத்தில் அகத்தியனாருடன் தொல்காப்பிய னாரும் நூலாய்ந்தனர் என்றும், முதல் மூன்று சங்கங்களிலும் அகத்தியம் நூலாகவும், அகத்தியத்தொடு தொல்காப்பியமும் பின்னிரு சங்கங்களின் நூல்களாகவும் இருந்தன என்றும் அறிவிக்கிறார்.

முச்சங்கம்

மதுரை, கடல் கொள்ளப்பட்டதால் முதற்சங்க அழிவும், கபாடபுர அழிவால் இரண்டாம் சங்க அழிவும் ஏற்பட்ட பின் மூன்றாம் சங்கம் உத்தர மதுரையில் ஏற்பட்டதாகக் கூறுகிறார்.

இடைச் சங்கக் கபாடபுர அழிவுக்குப் பின் தொல் காப்பியர் சங்கமிருந்து தமிழாராய்ந்தாராக அவ்வுரை சொல்லா மையால், தொல்காப்பியர் காலம், இடைச் சங்கக் கபாடபுர