உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

211

அழிவுக் காலக் கணக்கொடு தொடர்பு கொள்ளும் அளவில் அமைகின்றது. அதாவது கடைச்சங்கக் காலத்தொடு அவர் நூலை அன்றி, அவரை இணைத்துக்காணல் ஆகாது. அக்காலத்திற்கு முற்பட்டவர் என்பதைத் தெளிவிக்கிறார்.

அவர் சொல்லும் முச்சங்கக் கால எல்லை,

தலைச் சங்கம் இருந்த காலம் 4440 யாண்டு இடைச் சங்கம் இருந்த காலம் 3700 யாண்டு

கடைச் சங்கம் இருந்த காலம் 1850 யாண்டு

இவற்றைக் கூறும்போது "என்ப" என்ப" என்றே கூறுதலால் அவர்க்கு முன் கூறியவர் கூற்றுக் கொண்டே கூறினார் இவர் என்பது விளங்கும்.

இனிச் சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இடைச் சங்க வரலாற்றைக் கூறுகின்றார்; "இரண்டாம் ஊழியதாகிய கபாடபுரத்தின் இடைச்சங்கத்துத் தொல்காப்பியம் புலப்படுத்திய மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் அவைக்களத்து அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும்... என்றித் தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மர் உள்ளிட்ட மூவாயிரத்து எழுநூற்றுவர் என்பது” அது.

இந்தக் கருத்தைப் பழைய அகவல் ஒன்று,

"வடுவறு காட்சி நடுவட் சங்கத்

தகத்தியர் தொல்காப் பியத்தமிழ் முனிவர்

இருந்தை யூரிற் கருங்கோழி மோசியார்”

என விரிக்கிறது ஆண்டு 3700 என்றும் கூறுகிறது. அச்சங்கம் இருந்த காலம் அது.

தொல்காப்பியர்

இவற்றால், இடைச் சங்கத்தும் கடைச்சங்கத்தும் நூல், தொல்காப்பியம் என்பதாயிற்று. ஆனால், தலைச் சங்கத்து அகத்தியனார் மாணவர் தொல்காப்பியர் என்னின், அவ் வகத்தியர் காலத்தவரே தொல்காப்பியர் என்பதை அல்லாமல் பின் தள்ளல் முறையாமா? கற்பித்தார் காலம் எதுவோ அதுவே, கற்றார் காலமும் ஆக வேண்டும் அல்லவோ! அகவை வேறுபாடு ஆகலாமே அன்றி, ஆசிரியர் காலமும் மாணவர் காலமும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும்?