உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இம்முறை இடைக்காலத்தில் சிலரால் போற்றப்படா மையால், "கடிசொல் இல்லை காலத்துப்படினே" என்பது கொண்டு ஏற்றுப் போற்றினர் உரையாசிரியர்.

இம்முறை போற்றும் வகையால், இந்நாளில்,

நாவலர் ச.சோ.பாரதியார்

மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர்

செந்தமிழ் அரிமா. சி. இலக்குவனார் முனைவர் வ.சுப. மாணிக்கனார்

தமிழ்ப் பேரொளி பாரதிதாசனார்.

மக்கள் என்பது பன்மைப் பெயர். அதனை மக்கள்கள் என எவரும் வழங்கார். பழங்காலத்தில். ஆடுகள், மாடுகள், மலைகள் என அஃறிணையை அன்றி உயர்திணைப் பன்மைக்குக் கள் என்பது சேர்ப்பது இல்லை; சேர்ப்பது பிழை.

66

"அவன் அவள் அவர் அது எனும் அவை" என்பது மெய்கண்டார் தொடர்; பலர் பாலுக்கே 'கள்' சேர்க்கக் கூடாது என்றிருக்க, ஒருவருக்கே அவர்கள் எனக் 'கள்' சேர்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. அவர்கள் இவர்கள் பெரியவர்கள் என்பவை அவாள் இவாள் பெரியவாள் என்றெல்லாம் ஆகிவிட்டன. காளமேகப் புலவர் இவ்வழக்கை எள்ளுவது போல் பாடியுள்ளார்.

“செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றைவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவாள்அவாள் ஆம்!”

என்பது அது.

உயர்திணைக்கு ஒட்டாத கள் 'பூரியர்கள்' என த் திருக்குறளில் (919) இடம் பெறுகிறது. 'மற்றையவர்கள்' என்றும் டம் பெறுகிறது (263)

மார் என்பதொரு சொல்லீறு,வினைச் சொல்லிலேயே வருவது தொல்காப்பியர் காலத்து வழக்கு. சென்மார், பாடன்மார் எனவரும், ஆனால் அவ்வீறு தோழிமார் (அகம்.15) என வருவது ஆயிற்று.