உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

239

பெண்பிள்ளையை வாடா போடா முதலாக ஆண்பால் பட அழைப்பதும், ஆண் உடை உடுத்து அழகு பார்ப்பதும் அன்பின் பெருக்கால் விளைவது.

ஒரு பெருமூதாளர்! ஊன்றுகோல் காலாக உதவ ஒரு நீர்நிலைப் படிக்கட்டில் அமர்ந்திருக்கிறார். பால்வேறுபாடு அற்ற நிலையில் சிறுவரும் நீராடும் ஆட்டத்தை ஓவியமாக வடிக்கிறார்.

திணிமணல்,

செய்வுறு பாவைக்குக் கொய்பூந் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச் சீர்மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர

நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

என்கிறார். உளவியல் கூர்ந்த பாலியல் பகுப்புப் பழமையைத் தொல்காப்பியர் உரைத்தார்; தொடித்தலை விழுத்தண்டினார் என்னும் முதுபெரும்புலவர் அதன் மெய்ம்மத்தை நிறுவினார்.

ஒரு துறைக்கண் மேம்பட்டாரைப் பாராட்டுதல் பண்டு தொட்டே வழங்கி வரும் வழக்கமாம். சிறந்த போர்வீரர்க்கு ஏனாதி; சிறந்த வாணிகர்க்கு எட்டி - என்பவை முதலாகப் பல விருதுகள் வழங்கப்பட்டன. அவை சிறப்புப் பெயர் எனப்பட்டன. குடும்பத்தில் இடப்பட்ட பெயர் இயற்பெயர். ஒருவர்க்கு இயற்பெயரோடு சிறப்புப்பெயரும் சேர்கிறது. அவ்விரு பெயர் களில் எப்பெயர் முன்னாகவும், எப்பெயர் பின்னாகவும் இருத்தல் வேண்டும் என்பதைத் தொல்காப்பியர்,

“சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கு இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்"

என்று இலக்கணம் வகுத்தார். எ-டு:

தெய்வப் புலவர் திருவள்ளுவர்

கணியன் பூங்குன்றனார்