உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையின் பாட்டினும் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர் அவற்றுக்கு இது மரபிலக்கணம் ஆதலின்" என்பது.

இனி, "பாட்டினும் தொகையினும் உள்ள சொல்லே மீட்டொரு காலத்துக்கு உரித்தன்றிப் போயினவும் உள. அவை முற்காலத்துளவென்பதே கொண்டு பிற்காலத்து நாட்டிச் செய்யுள் செய்யப் பெறா என்பது" என்கிறார் (தொல்.செய்.80)

ஆனால் சோழன் நல்லுருத்திரன் என்பார் இயற்றிய முல்லைக்கலியில், ஈதோளிக் கண்டேனால் என்னும் தொடர் டம் பெற்றுள்ளது (117)

46

'இது. இதோளி 'ஈதோளி' எனச் சுட்டு நீண்டு நின்றது" என்கிறார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர்! அற்றுப்போன ஆட்சி என்பதும், எங்கோ தலை நீட்டுதல் கண்டு, ஆய்வாளர் பார்வை இருத்தல் வேண்டும் என்பதன் சான்று ஈதாம்.

அழன், புழன் என்னும் சொற்களைப்பற்றி ஆசிரியர் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் (எழுத்து.193)"அழன் புழன் என்பன போல்வன இக்காலத்து இல என்றும், புதியன தோன்றினாற்போலப் பழையன கெடுவனவும் உள. அவை அழன் புழன் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்" எனவும் உரையாசிரியர்கள் வரைகின்றனர்.

பெண்மகள் என்பது தொல்காப்பியர் காலத்தில் 'பெண் மகன்' எனவும் வழங்கியமையால். "பெண்மை அடுத்த மகனென் கிளவியும்" என்றார். இதற்கு நச்சினார்க்கினியர், "கட்புலனாய தோர் அமைதித் தன்மையடுத்து நாணுவரை இறந்து புறத்து விளையாடும் பருவத்தால் பால் திரிந்து பெண் மகன் என்னும் பெயர்ச்சொல் என்று பொருளும், பெண்மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் அவ்வாறே வழங்கினாராயிற்று இங்ஙனம் கூறலின்” என்று விளக்கமும் வரைந்தார்.

"புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் பாலரையும் பெண்மகன் என்று வழங்குப" என்று உரையா சிரியரும்,"மாறோக்கத்தார் அப்பருவத்துப் பெண்பாலாரை இக்காலத்துப் பெண்மகனென வழங்குப்" என்று சேனாவரையரும் கூறுவர். மாறோகம் என்பது கொற்கை சார்ந்த பகுதி. மாறோக்கத்து நப்பசலையார் சங்கப் புலவர். சேனாவரையர் ஊர் கொற்கை சார்ந்த ஆற்றூர்!