உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

237

வழக்கு இல்லாமல் - முற்றாக அழிந்து போவதில்லை. அழிந்தமை பொதுவில் காணக்கிடப்பினும் புதைபொருள் - தொல்லியல் ஆய்வாளிக்குக் கிடைக்கும் புலனம் (சான்று) போலக் கிட்டுவதும் உண்டு. குடியேற்றப் பாதுகாப்பு என்னும் இயற்கை வழக்கு அரணம்போல இந்நாட்டுமக்கள் எந்நாட்டுட் குடிபுகுந்து வாழ்குவராயினும் ஈங்குக் கொண்டிருந்த வழக்கு களைப் பாட்டி வழங்கிய பழம் பொருள் போலப் பாதுகாப்பது உண்டு எனக் கொள்ளவேண்டும்.

-

தவம் என்பதொரு தன்மை; தவம் எனத் திருக்குறளில் ஓர் அதிகாரம் உண்டு. தவம் என்பது தவ என்னும் நிலையில் மிகுதி என்னும் பொருள்தரும் என்பது தொல்காப்பியம் -உரியில். போலித்தவம் பெருகிவிட்ட இந்நாளில் தவ என்பதன் உரிப் பொருள் காணல் அரிது எனின், திருச்சிராப்பள்ளி வட்டாரத்தில், அது தவப்பிஞ்சு (மிகச் சிறு பிஞ்சு) என்னும் வழக்கு உள்ளது, நரல் என்பது மக்கள் பெருக்கத்தைக் குறிக்கும் நெல்லைப் பகுதிவழக்குச் சொல். முறம் என்பது எங்கும் அறியும் சொல்லாக இருக்க சுளகு என்பது நெல்லை வட்டாரத்தில் மட்டுமே வழங்கும் சொல்லாக உள்ளது. சொல்லாய்வு கொண்டு ஒருவர் காலத்தைத் தீர்மானிக்கும்போது, ஏதோ ஒரு சொல்லைச் சுட்டிக்காட்டி இது இவ்வளவு பிற்காலத்தது என்று கொண்டு தீர்மானித்துவிடல் ஆகாது என்பதற்கே இவை சொல்லப் பட்டன. தொல்காப்பியர் நாளில், அதோளி, இதோளி, உதோளி, எதோளி என்னும் சொற்கள் வழக்கில் இருந்தன என்பதை அறியும் நாம் அச்சொற்கள் சங்க இலக்கியப் பரப்பிலோ திருக்குறளிலோ இடம் பெறாமை கொண்டு தொல்காப்பியத்திற்கும் இவற்றுக்கும் உள்ள நெடிய இடை வெளியை உணரலாம். அதோளி. இதோளி முதலியவை சுட்டு முதலாகிய இகர இறுபெயர், வினா முதலாகிய இகர இறுபெயர் எனவும் வழங்கும். அதோளி அவ்விடம் என்பது போன்ற பொருளவை இச்சொற்கள். இவ்வாறே குயின் என்பதொரு சொல்லும் வழக்கு வீழ்ந்தது. இதுபற்றிப் பேராசிரியர் "ஒரு காலத்து வழங்கப்பட்டசொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. அவை அதோளி, இதோளி, உதோளி எனவும் குயின் எனவும் நின்ற வை ஒருகாலத்து உளவாகி இக்காலத்து இலவாயின. அவை முற்காலத்து உள என்பதே கொண்டு வீழ்ந்த காலத்தும் செய்யுள் செய்யப்படா. அவை, ஆசிரியர் நூல் செய்த காலத்து உளவாயினும் கடைச்